டில்லியில் வெளியுறவுத்துறை கிழக்கு பிரிவு செயலர் விஜய் தாக்குர் சிங் கூறியதாவது: தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை அரசு முறை பயணமாக பிரதமர் மோடி செல்கிறார். தலைநகர் பாங்காக்கில் நடக்கும் ஆசியான் – இந்தியா கிழக்கு ஆசியா ஆர்.சிஇ.பி. என்படும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணி ஆகிய அமைப்புகளின் மாநாடுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு நவ. 2ல் செல்லும் பிரதமர் அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது தாய்லாந்து மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறளை வெளியிடுகிறார். அத்துடன் சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின் 550வது பிறந்த ஆண்டையொட்டி நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
தாய்லாந்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். பாங்காக்கில் உள்ள சுலாலாங்கோர்ன் பல்கலை பேராசிரியர் டாக்டர் சுவித் விபுல்ஸ்ரீஸ்த் திருக்குறளை தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.