தனிஷ்க் விளம்பரம்; சர்சசையின் பின்னணி என்ன?

தனிஷ்க் நகைக்கடை விளம்பரத்தில், ஒரு ஹிந்து மருமகளுக்கு, முஸ்லிம் மாமியார் வளைகாப்பு நடத்துவதாக விளம்பரம் வெளியாகி சர்ச்சையானது.

இதே ஒரு முஸ்லிம் மருமகளுக்கு, ஹிந்து மாமியார் வளைகாப்பு நடத்துவது போன்ற விளம்பரம் வெளியாகியிருந்தால், இந்த நேரம் அனைத்து தனிஷ்க் நகைக்கடைகளும் சூறையாடப்பட்டிருக்கும்.

கிருஸ்தவ மருமகள் என்றால் கிருஸ்தவர்களால் இதே போன்றதொரு நிலைப்பாடுதான் எடுக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு மாற்று மதத்தவர் லவ் ஜிகாத், காதல், ஏமாற்றுதல் போன்ற எந்த காரணம் கொண்டும் ஒரு ஹிந்து ஆணையோ, பெண்ணையோ திருமணம் செய்திருந்தால், அந்த ஹிந்து தான் மதம் மாற்றப்படுகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும் என்பதே இந்த எதிர்ப்புகளின் அடிநாதமாக இருக்கின்றன.

நிர்வாகமும், விளம்பரத்தை திரும்பப் பெற்றுள்ளது, ஒரு விளம்பரத்திற்காக, தனிஷ்க்கை நாம் புறக்கணிப்பது தவறு. தனிஷ்க், டாடா குழுமத்தின் ஒரு அங்கம்.

டாடா குடும்பத்தின் தேசபக்தியை உலகறியும். அவர்களின் அப்பழுக்கற்ற தேசபக்தி பல சமயங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தில் யாரோ சில விஷமிகள் இதை செய்திருக்கலாம். அது முதலாளிகளுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இந்த தவறுகளை சுட்டிக்காட்டலாமே தவிர, நிறுவனத்தை புறக்கணிப்பது என்பது சரியான முடிவாக இருக்காது.

அதே சமயம், வேண்டுமென்றே இப்படி செயல்படும் சில உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களும் இங்கு இருக்கின்றன. அவற்றை நாம் இனம் கண்டு புறக்கணிப்பது, சுதேசி பொருட்களை பயன்படுத்துவது என்பதே சரியான நடைமுறை.

தேசபக்தியுடன் இருப்போம், சுதேசி பொருட்களை பயன்படுத்துவோம், தேசத்தை வளப்படுத்துவோம்.