வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்தவர்களின் வீட்டுக்கதவில், தனிமை படுத்தப்பட்டவர்கள் என்ற விவரம் ஒட்டப்படும் என்று கூறினார். தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கான படுக்கைகள் 25 சதவீதம் ஒதுக்கப்படும் எனறு அவர் கூறினார். விமான நிலையத்தில் சோதனையிடப்பட்டவர்களில் வீட்டு கண்காணிப்பில் 9 ஆயிரத்து 424 பேரும், அரசு கண்காணிப்பில் 198 பேரும் இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்ததார்