பஞ்சாப் சிறைத்துறை டி.ஐ.ஜியான லக்மீந்தர் சிங் ஜக்கர் சில நாட்களுக்கு முன் தன் பதவியை ராஜினாமா செய்தார். விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக இதை செய்ததாக செய்தி ஊடகங்களால் பரப்பப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் சிறைத் துறையில் இருந்த போது, லஞ்சம் வாங்கியதால் கடந்த மே மாதம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 2012-ல் சிறையில் நடந்த மரணம் தொடர்பாக பாட்டியாலா நீதிமன்றம் அவரை அவமதிப்பு வழக்கில் கண்டித்திருந்தது. இதைபோல பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இவர், தன்னை தியாகியாக வெளிகாட்டிக் கொள்ள இந்த போராட்டத்தை சாக்கிட்டு பதவியை துறந்துள்ளார் என்பதே உண்மை. இடது சாரி பத்திக்ரிகைகளும் வழக்கம் போல இதற்க்கு போராட்ட பின்னணியே காரணம் என்று செய்தி வெளியிட்டு மகிழ்ந்து உள்ளது. இப்படி காக்கை உக்கார பழம் விழுந்தது போல் உண்மை தன்மையை மறைத்து போலிகளை தியாகியாக்கும் அவலம் தொடருகிறது. பொதுமக்கள் கிடைக்கும் செய்திகளை நம்பகத்தன்மையை அறிந்துக்கொள்வது அவசியம்