பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதற்காக பாரத தரைப்படை ஜவான்கள் 1965ல் மேற்கு எல்லையோரம் எதிரியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள். பதுங்கு குழியில் இருந்த ஜவான்களுக்கு
ஆர்.எஸ்.எஸ். அன்பர்கள் தேனீரும், பிஸ்கெட்டும் வழங்கினார்கள்.
என்ன வேண்டும் உனக்கு என்று ஒரு ஜவான் கேட்டபொழுது எதிரே தெரிந்த லாகூரைக் காட்டி அது வேணும் என்றார் ஒரு இளம் ஸ்வயம் சேவகர். இன்னும் சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அன்பர்கள் உயிரை பணையம் வைத்து ராணுவ தளவாடங்களை போர்முனை வரை கொண்டு செல்ல உதவினார்கள்.
இதையெல்லாம் குறிப்பிட்ட சென்ட்ரல் கரியப்பா தன்னை சந்தித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வல்கரிடம், ”குருஜி என்ன பயிற்சி கொடுக்கிறீர்கள், உங்கள் இளைஞர்கள் இவ்வளவு அபார தேசபக்தி, துணிச்சல், சமயோசிதம் காட்டுகிறார்களே?” என்று கேட்டார்.
சிரித்தபடியே குருஜி ”கபடி ஆடுகிறோம்” என்றார். கரியப்பா, ”விளையாடாதீர்கள் குருஜி சரியான காரணம் என்ன” என்று மறுபடியும் கேட்டார். ”கபடி போன்ற விளயைாட்டுக்கள் தொடங்கி ஏராளமான உடற் பயிற்சிகள், அறிவுப் பயிற்சி, தேசபக்தி தரும் மனப்பயிற்சி எல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸில் கிடைக்கிறது’’ என்றார் ஸ்ரீகுருஜி கரியப்பாவுக்குப் புரிந்தது.
கரியப்பா 1953 லேயே ரிட்டையர்டு ஆகிவிட்டார்
https://en.wikipedia.org/wiki/K._M._Cariappa