ஈஷா யோகா மையத்தில் நடந்த மாட்டுப் பொங்கல் விழா நிறைவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினார். அப்போது, ‘காவிரி தமிழகம் உட்பட மூன்று மாநிலங்களில் ஓடுகிறது. மூன்று மாநிலங்களும் சேர்ந்து, அறிவியல் குழு அமைக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்த இந்த மண் கடந்த, 50 ஆண்டுகளில் எதற்கும் பிரயோஜனம் இல்லாததாகிவிட்டது. இயற்கை விவசாயத்திற்கு மாறாவிட்டால் மண்ணை காக்க முடியாது. மண் வளம், விவசாயிகளை காக்க நடவடிக்கை தேவை. விளைபொருட்களை விவசாயிகள் எங்கு வேண்டுமென்றாலும் விற்கும் நிலை வரவேண்டும். அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு என்ற நிலை ஏற்பட வேண்டும். மாவட்டம் தோறும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் துவக்கப்பட வேண்டும். கோயில்கள் ஆன்மிக மையங்களாக மாற வேண்டும். அரசு கோயில்களை நிர்வகிக்க நினைப்பது தவறானது. இவற்றுக்கு உறுதி கொடுப்பவர்களுக்குதான் எனது ஓட்டு’ என கூறினார்.