ஆகஸ்ட் 5 ந்தேதி நடக்கும் பூமி பூசையை தடுக்க காங்கிரஸ் கட்சி குள்ளநரித்தனத்தை கடைபிடிக்கிறது. நாடு விடுதலை பெற்றவுடன், முஸ்லீம் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட சோமாநாதர் ஆலயத்தை புணர்நிர்மாணம் செய்ய முற்பட்ட போது, நேருவும் கலந்து கொள்ளாமல், குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்தையும் தடுத்த செயல்களை தற்போது சுட்டிக் காட்டி மோடி மீது விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். நேரு மதசார்பற்ற நாட்டின் பிரதமர் ஒரு மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்க்கவே, கலந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். அச் சமயத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் விவரமாக வெளியிட்டு, கேள்விகளை எழுப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
சோமநாதர் ஆலயத்திற்கு என ஒரு வரலாறு உண்டு. இந்தியாவை ஆக்கிரமிக்க வந்த கஜனி முகமது முதல் கடைசி முஸ்லீம் அரசர்கள் வரை ஆலயத்தில் உள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன, கோவிலை இடித்த வரலாறும் உண்டு. 1947 –ல் நாடு விடுதலை பெற்ற பின்னர் பட்டேலின் முயற்சின் காரணமாக சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்தன. இறுதிய இணைந்த சமஸ்தானம், சோமநாதர் ஆலயம் அமைந்துள்ள சமஸ்தானம் ஜூனாகாட். நிஸாமின் ஆட்சியில் இடிக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தை செப்பினிட நிஜாம் அனுமதிக்கவில்லை. 1947 நவம்பர் மாதம் சர்தார் வல்லபாய் பட்டேலும், திரு. கே.எம். முன்ஷியும் சிதிலமடைந்த சோமநாதர் ஆலயத்தின் பிரபாஸ் படான் ( Prabhas Patan ) பகுதியில் நடந்து கொண்டிருந்த போது, பட்டேலிடம், கோவிலை மறுபடியம் கட்ட வேண்டும் என திரு. கே.எம். முன்ஷி கூறியதையடுத்து, நவம்பர் மாதம் 13ந் தேதி மாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் சர்தார் பட்டேல், ´On the auspicious day of the New Year, we have decided that Somanath should be reconstructed . You people of Saurastra should be do your best. That the Government of India has decided to rebuild the temple and install the shrine என பேசினார்.
இதன் பின்னர் தான் சோமநாதர் ஆலயம் கட்ட முதலில் மந்திரிசபையில் ஏற்றுக் கொண்டாலும், காந்தியின் ஆலேசனையும் பெறப்பட்டது. அப்பொழுது, அரசாங்க நிதியின் கோவில் கட்டக் கூடாது, பொது மக்களின் பங்களிப்புடம் செயல்படுத்தலாம் என காந்தியின் கோரிக்கைக்கு ஏற்ப ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி கோவில் கட்ட முனைந்தார்கள். 1950 டிசம்பர் மாதம் பட்டேல் காலமானதையடுத்து, சோமநாதர் ஆலயம் கட்ட முழு முயற்சி எடுத்தவர்கள் நேரு மந்திரிசபையில் இருந்த டாக்டர் கே.எம். முன்ஷியும், திரு. வி.என். காட்கில்.
சோமநாதர் ஆலயம் எழுப்ப அப்பொழுது எதிர்ப்பு தெரிவித்தவர்களின் ஒருவர் கல்வி அமைச்சர் மௌலான அபுல் கலாம் ஆஸாத். மந்திரிசபை கூட்டத்தில், கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல், சிதலமடைந்த கோவிலை தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என வாதிட்டார். ஆனால் சிதலமடைந்த மசூதிகளை செப்பனிட உத்திரவிட்டவர், மசூதிகளையும் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறவில்லை. சோமநாதர் ஆலயம் அமைக்க அரசு முன் வரவில்லை என இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் தற்போது டுவிட்டரில் பதிய விடுகிறார்கள். உண்மை என்ன என்பதையும் கவனிக்க வெண்டும்.
1951 ஏப்ரல் மாதம் 24 ந் தேதி திரு. கே.எம். முன்ஷி, நேருவுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் விலா வாரியாக விளக்கியிருக்கிறார். 1947 டிசம்பர் மாதம் 13 ந் தேதி பொதுப்பணி சுரங்கம் மற்றும் மின் அமைச்சகத்தின் நிலைக்குழு, காட்கிலின் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, சோமநாதர் ஆலயத்தை பழைய அமைப்பில் கட்டுவதற்கு, ஒரு சதுர மைல் பரப்பளவு புணரமைக்க முடிவு செய்து, இது சம்பந்தமான குறிப்பு கேபினட் அமைச்சரவைக்கு அனுப்பட்டது. அமைச்சரவையில், கோவில் மறு கட்டுமானத்திற்கு அனுமதி அளித்தது மட்டுமில்லாமல், சிதமடைந்த மசூதிகள் மற்றும் முஸ்லீம்களின் வழிபாட்டு தளங்களையும் மறு சீரமைப்பு செய்யலாம் என முடிவு எடுக்கப்பட்டது. முடிவின் படி அரசாங்கமே இரண்டு பொறியாளர்கள் மற்றும் ஒரு கட்டிடகலை வல்லுநர் ஒருவரையும் நியமித்தது. 1951-ல் கோவிலின் வெளி பிரகாரம் கட்டப்பட்டு, மூல விக்ரகம் வைக்கும் பகுதியும் நிறைவடைந்து, மூலவரான லிங்கத்தை பிரதிஷ்ட்டை செய்யும் போது குடியரசுத்தலைவர் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இந்த உண்மையை மறைத்து விட்டு, ஏதே நேரு மதச்சார்பற்றவர் போல் காண்பித்து நாடகமாடுகிறார்கள்.
குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கலந்து கொள்வதை தடுக்க முற்பட்டவர் நேரு. இதற்காக மந்திரிசபை கூட்டத்தில் குடியரசு தலைவர் கலந்து கொள்ள கூடாது என விவாதிக்கப்பட்டது. மந்திரி சபை கூட்டத்தில் குடியரசு தலைவர் கலந்து கொள்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது என தெளிவாக குறிப்பிட்டார். ஆனால் நேருவின் கோரிக்கையை செவி சாய்க்கவில்லை என்பதும், நேருவிற்கு எழுதிய கடிதத்தில், நான் என் மதத்தை நம்புகிறேன். அதிலிருந்து என்னைத் துண்டிக்க முடியாது (I believe in my religion and cann’t cut myself away from it. ) தெளிவாக குறிப்பிட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். மேலும் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் தனது நிலைப்பாட்டை I would do the same with a mosque or a church if I were invited. This is the core of Indian secularisim. Our State is neither unreligious nor anti- religious இவ்வாறாக எழுதியுள்ளார். ஆகவே நேரு துவக்க காலம் முதல் இந்து விரோத செயல்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியிடம் இந்து உணர்வு என்பது ஓட்டு வாங்குவதற்கு மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் மற்றொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு சீனாவில் உள்ள நதிகளிலிருந்து நீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, சீனாவில் பணியாற்றிய தூதர் கே.எம்.பணிக்கருக்கு, திரு முன்ஷி கடிதம் எழுதினார். கம்யூனிஸ ஆதரவு கொண்ட கே.எம். பணிக்கர், நேருவுக்க எழுதிய கடிதத்தில் asked the Ministry of External Affairs to what particular head of amount the expense on that could be debited and the letter was placed before Nehru என எழுதி தனது இந்து விரோத தன்மையை வெளிப்படுத்தினார்.
தற்போது டுவிட்டரில் மதசார்பற்ற தன்மையை பறைசாற்றும் காங்கிரஸ் கட்சி, குஜராத் தேர்தலின் போது, திருவாளர் ராகுல் காந்தி, சோமநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு he was a devotee of Lord Shiva and a janeu-dhari Brahmin. என கூறியதையும், அதையே தேர்தலுக்கு பயன்படுத்தி விளம்பரம் செய்த காங்கிரஸ் கட்சி, ராமர் ஆலயம் அமைக்கப்பாடுபட்டவர்களை ஆதாயத்திற்காக நடத்துகிறார்கள் என கொச்சைப்படுத்துவது சரியா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.