சேவாபாரதிக்கு எதிரான மனு தள்ளுபடி

கேரளாவில் கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு சேவை செய்துவந்த சேவா பாரதி அமைப்பையும் சேவா பாரதியின் தன்னார்வலர்கள் வழங்கிய இலவச சேவையையும் கருத்தில் கொண்டு அதனை சேவை, தொண்டு நிவாரண அமைப்பாக கண்ணூர் மாவட்ட ஆட்சியர் 22 மே 2021 அன்று நியமித்தார். ஆனால், சேவா பாரதிக்கு அரசியல் முகம் இருப்பதாக இடதுசாரி அமைப்புகள் குற்றம்சாட்டின. இதுபோன்ற பலமுனை அரசியல் அழுத்தங்கள் காரணமாக ஆட்சியர் தனது உத்தரவை தானே இரண்டே நாட்களில் ரத்து செய்தார். ஆட்சியரின் இந்த ரத்து உத்தரவை எதிர்த்து சேவா பாரதி அமைப்பு, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆட்சியர் விசாரணை நடத்தத் தவறியதும் இவ்வழக்கில், நியமனம் ரத்து செய்யப்படுவதற்கு முன் மனுதாரருக்கு நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. நீதிபதி இதுகுறித்த தனது உத்தரவில், ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பிக்கும் முன் மனுதாரருக்கு விசாரணை நடத்த அவகாசம் வழங்கப்படவில்லை. இது நீதிக்கு எதிரானது என்று கூறினார். முன்னதாக, ஆட்சியரின் உத்தரவை சிங்கிள் பெஞ்ச் ரத்து செய்த நிலையில், தற்போது டிவிஷன் பெஞ்சும் அதையே கூறியுள்ளது. மேலும், சேவா பாரதிக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இடதுசாரிகள் தலைமையிலான கேரள மாநில அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.