ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 2016ம் ஆண்டு முதல் ஏ.ஐ.ஐ.பி வங்கி நிதியுதவி அளித்து வருகிறது. அவ்வகையில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிக்காக கடன் வழங்க ஆசிய உட்கட்டமைப்பு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் முதலீட்டு செயல்பாடுகளுக்கான துணைத்தலைவா் டி.ஜே. பாண்டியன் சென்னை வந்திருந்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆய்வு செய்தார். பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இச்சூழலில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 2,650 கோடி கடன் வழங்க ஆசிய உட்கட்டமைப்பு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இதுவரை 28 திட்டங்களுக்கு பாரதத்தில் கடன் வழங்கி உள்ளது.