சி.பி.ஐ வழக்குப் பதிவு

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிறகு திருணாமூல் கட்சியினர் நடத்திய கொடூர வன்முறை வழக்குகளை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், வன்முறைகள், கொலை, கற்பழிப்பு தொடர்பான சம்பவங்களை விசாரிக்க சி.பி.ஐக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இதனை விசாரித்த சி.பி.ஐ கடந்த 4 மாதங்களில் 51 வழக்குகளை பதிவு செய்துள்ளது.  20 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. மேலும் 100 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  21 வழக்குகளில் எந்த ஆதாரமும் இல்லை என்று சி.பி.ஐ கூறியதாக அதன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கண்டிக்கிறோம். கல்கத்தா உயர்நீதிமன்றம் வகுத்துள்ள மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) பரிந்துரைத்த எந்த வழக்கும் முடிக்கப்படவில்லை என சி.பி.ஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.சி ஜோஷி தெரிவித்தார்.