சிறையிலும் முன்னுதாரணமாக விளங்கிய ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள்

சிறையிலும் முன்னுதாரணமாக விளங்கிய

ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள்

சர்வாதிகாரியாக இருந்த முன்னாள் பிரதமர் இந்திராவால் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் பழகியதால் மாற்றுக் கருத்துக் கொண்ட அடைக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகர்களுடன் இனிய நண்பர்களாக மாறும் நல்வாய்ப்பு ஏற்பட்டது. எப்பொழுது கண்டாலும் முகம் புன்முறுவல் பூக்க, நட்பு கைகளைப் பிணைக்க, இதயங்கள் கலந்து உறவாடும் உள்ளங்களாக அவர்கள் மாறினர்.

மிசா வாழ்வு முடிந்த ஓராண்டிற்கு பின்னர் 1978 மார்ச்சு மாதம் மீண்டும் மிசா நண்பர்கள் பலர் வெளியில் ஒன்று கூடும் நிகழ்ச்சி ஏற்பாடு ஆனது. அந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில துணை அமைப்பாளர் இராமகோபாலன் பிரதான பங்கு வகித்தார்கள். வருகை
அளித்தவர்கள் அனைவரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அன்று கூடிய நண்பர்கள் ஆர்.எஸ்.எஸ்யைப்பற்றி தங்கள் அபிப்பிராயங்கள் ஒவ்வொருவராக தெரிவித்தார்கள்.

திருச்சி மாவட்ட தி.மு.க. தலைவர் எம்.எஸ்.வெங்கடாச்சலம் தனது பேச்சில் குறிப்பிட்டதாவது – ஆர்.எஸ்.எஸ்காரர்களிடம் நல்ல தேச பக்தியைக் கண்டுணர்ந்தேன். சிறந்த நிகழ்ச்சிகளை முன்கூட்டி ஏற்பாடு செய்து தந்தனர். கொள்கையில் உறுதியாக இருந்தனர். இப்படிப்பட்ட இயக்கம் இந்நாட்டில் உள்ளதால் என்றுமே இந்நாடு வரும் ஆபத்துக்களை சமாளிக்க முடியும் என்பது திண்ணம்.

முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி எம்.எஸ்.மணி கூறும்போது, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நல்ல முறையில் பயமின்றி சிறை வாழ்வை கழித்தவர்கள். கடந்த காலம் போல இன் றுள்ள அரசியல் வாழ்வு இல்லை; பதவி உயர்வு, மற்ற பிரதிபலன்கள் எதிர்பாராத ஆர்.எஸ்.எஸ்காரர்களைக் காண எனக்கு மகிழ்ச்சி உண்டானது என்றார்கள்.

திருச்சி மாநகர தி.மு.க. செயலாளர் ஏ.வி.கிருஷ்ண
மூர்த்தி தன் பேச்சில், கம்யூனிஸ்டுகளால்தான் கட்டுப்பாடாகவும் மறைமுகமாகவும் அன்டர்
கிரவுண்டில் தலைமறை
வாகவும் நாட்டிற்கு வேலை செய்ய முடியும் என நினைத்
திருந்தேன்; ஆர்.எஸ்.எஸ்
ஸிலும் அப்படிப்பட்ட பயிற்சி அளித்துள்ளார்கள்; திறம்பட நெருக்கடிக் காலத்தில் செயல்புரிந்தார்கள்; கம்யூனிஸ்டுகளை விட உறுதி வாய்ந்த இயக்கம் இதுவென்று அறிந்தேன் என்றார்கள்.

முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர் ராவி அவர்கள் தன் அபிப்பிராயத்தை தெரிவிக்கையில், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் சிறையில் தாங்கள் தைரியமாக இருந்ததோடு மற்றவர்களுக்கும் தைரியம் கொடுக்கும் விதமாக நடந்துக் கொண்டார்கள். இந்த நெருக்கடி காலத்தில் கம்யூனிஸ்டுகளால் ஒன்றும் செய்ய முடியாத சமயத்தில்
ஆர்.எஸ்.எஸ் பாரத நாட்டில் மட்டுமின்றி அகில உலகிலும் சிறப்பாக பணியாற்றி உள்ளது. `சுப்பிரமணியம் சுவாமியின் வீர தீர பராக்கிரம செயலைப் பாராட்டி,
ஆர்.எஸ்.எஸ் உண்மையில் ஒரு ஒப்பற்ற இயக்கம் (‘A’ class organization) என தன் கம்பீர தொனியில் குரலெழுப்பி முடித்தார்கள்.

தி.க.தலைவர் செல்வேந்திரன் அவர்கள் தன் உரையில் குறிப்பிடும்
போது, ராஷ்ட்ரீய ஸ்வயம்
சேவக சங்கத்தில் குறிக்கப்
படுகின்ற ‘ஹிந்து’ என்ற சொல்லை எடுத்துக்
கொண்டால் அதில் தி.கவும் தி.மு.கவும் அடிப்
பட்டு போகிறது. லட்சியம் எவ்வளவு உயர்வானதோ அதற்கான கடினமான பயிற்சியை மேற்கொள்ளு
கிறார்கள். ஆகவே அவர்களால் துன்பங்களை தாங்க முடிகிறது. இங்கு வைக்கப்பட்டுள்ள படங்
களான வ.உ.சி., சாவர்க்கர், அரவிந்தர் ஆகியவர்களின் லட்சியங்களை ஆர்.எஸ்.எஸ்
காரர்கள்தான் மறக்கவில்லை; மற்றவர்கள் மறந்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.பாலகிருஷ்ணன் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ் என்றால் என்னமோ ஏதோ என்ற எண்ணமிருந்தது; பலாத்காரம், துவேஷம் வன்முறை படைத்தது என்ற அவதூறு பிரச்சாரம் எங்களை அப்படி நினைக்க வைத்தது; ஆனால், அவர்கள் சிறந்த தேசபக்தியும் கட்டுப்பாடும் கொண்ட மனிதாபிமானமுள்ள தொண்டர்கள் குழாம் என்பது சிறையில்தான் புரிந்து கொள்ள முடிந்தது.

‘ஆர்.எஸ்.எஸ் என்பது அழகான அமைப்பு’ ஒவ்வொரு நகர கிராமத்திலும் பரவ வேண்டிய ஸ்தாபனம். அதன் மீதான எங்களது சந்தேகங்
களைப் போக்கிக்கொண்டது மட்டுமின்றி, ஒவ்வொன்றையும் நாங்களே கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதைக் கூற நான் கூச்சப்பட மாட்டேன். இதில் ஒளிவு மறைவு ஏதும் இல்லை” என்றார் பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி.

சோஷலிஸ்டுகளில் ஒருவரான உன்னி
கிருஷ்ணன், “ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரு இயக்கமே இந்த நெருக்கடி காலத்தில் துணிந்து செயல்பட்டு முன்னின்ற இயக்கமாகும்” என்றார்.

வெங்கட்ராமன் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ்ஸின் போக்கை சிறையிலேயே சரியாக புரிந்துக்
கொண்டு என் ஐயங்களை போக்கிக் கொண்டது மட்டுமின்றி, அதன் தேசபக்தி மிக்க தன்மை அறிந்து ஸ்வயம் சேவகனாகவும் ஆனேன் என்றார்.

இறுதியில் இராமகோபாலன் அவர்கள், உரையாற்றுகையில், “இந்த இயக்கத்தைப் பற்றிய தப்புக் கருத்துக்களை போக்கும் பொறுப்பு உங்களுடையதாகும்; பல கருத்து வேறுபாடுகளுக்கிடையில் ஒழுக்கம், கட்டுப்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் நாம் ஒன்றாக வேண்டும்” என்று கூறி, சங்கத்தின் குறிக்கோளை விரிவாய் விளக்கினார். இந்நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே தி.மு.க. தலைவர்கள் வருகை தந்திருந்தது சங்க பழக்கத்திற்கு சிறந்த உதாரணமாகும்.

தேசபக்தி, கட்டுப்பாடு கொண்ட மனிதாபிமான
முள்ள தொண்டர்கள் குழாம் என்பது சிறையில் தான் புரிந்து கொள்ள முடிந்தது.