கொடுங்கோல் கம்யூனிச நாடான சீனாவில், பத்திரிகையோ, பொது மக்களோ சுதந்திரமாக கருத்து வெளியிடமுடியாது. இதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. இதை மீறி செய்திகள் வெளியிடும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுவார்கள். இந்த வருடத்தில் இதுவரை மட்டும் கொரோனா சம்பந்தப்பட்ட உண்மை செய்திகள், அரசின் பிரச்சனைகள் குறித்து செய்திகளை வெளியிட்ட 274 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 47 பத்திரிகையாளர்கள் எவ்வித புகாரும் விசாரணையும் இன்றி பல வருடங்களாக சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.