மேஜர் தயான் சந்த், இந்தியாவின் சிறந்த ஹாக்கி ஜாம்பவான் ஆவார். இவர் ஹாக்கி விளையாட்டின் ‘வித்தாரக்’ (தங்க மகன்) என்று அழைக்கப்படுகிறார். 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இவர் இடம்பெற்றிருந்த பாரத ஆடவர் ஹாக்கி அணி, ஏழு முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
தியான் சந்த், 1905ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் சமேஷ்வர் சிங் − – சாரதா சிங். தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவரின் தந்தை பிரிட்டிஷ் இந்தியப் பாதுகாப்புப் படையில் இருந்தபோது ராணுவ ஹாக்கி அணியில் விளையாடினார். தந்தையின் பணிமாறுதல் காரணமாக இவரின் குடும்பம் பல நகரங்களுக்கு குடிபெயர வேண்டியிருந்தது. இதனால் தியான் சந்த் ஆறு வருடப் பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டார். இவர்களின் குடும்பம் இறுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் தங்கியது.
ஹாக்கி பந்தினைக் கையாள்வதில் மேதை எனப் புகழப்பட்ட. தியான் சந்த் 1948ல் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பை தொடரோடு ஓய்வு பெற்றார். விளையாட்டின் போது பந்து இவரது மட்டையை விட்டு விலகாமல் இவர் வசமே வரும் என்பதால் இவரை எதிரணியினர் வியப்புடன் பார்த்தனர். இதனால் நெதர்லாந்தில் ஒருமுறை, தயானின் ஹாக்கி மட்டையை உடைத்து உள்ளே ஏதாவது காந்தம் இருக்கிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது இவர் மொத்தம் 400 கோல்கள் அடித்துள்ளார் இந்திய ஹாக்கி வரலாற்றில் ஒருவர் அடித்த அதிகபட்ச கோல்கள் இதுவே.
1936 ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி, ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. போட்டியை காண ஹிட்லரும் வந்திருந்தார். ஜெர்மனி அணியை, ஹிட்லர் முன்னிலையில் இந்திய அணி 8 கோல்கள் அடித்து வீழ்த்தியது. போட்டி முடிந்ததும் தயானிடம் வந்த ஹிட்லர், ”ஜெர்மனிக்கு வந்து விடுங்கள் இந்திய ராணுவத்தில் மேஜராக இருக்கும் உங்களுக்கு ஜெர்மனி ராணுவத்தில் அதை விட உயர்ந்த பதவி தருகிறேன்!” என்றார். ஆனால் “இந்திய அணியை தவிர எந்த அணிக்கும் விளையாடும் எண்ணம் இல்லை” என்று நேரடியாக ஹிட்லரிடம் மறுப்பு தெரிவித்தார் தயான்.
1956 ஆம் ஆண்டில் பாரத அரசின் குடிமை விருதுகளில் மூன்றாவது பெரிய விருதான பத்ம பூஷன் விருதினைப் பெற்றார். இவரின் பிறந்த நாளான ஆகஸ்டு 29ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. விளையாட்டு துறையில் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது இவரது நினைவாக `மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது’ என வழங்கப்படுகிறது. ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில், தயானுக்கு 4 கைகளுடன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு கைகளிலும் அவர் ஹாக்கி மட்டையை பிடித்திருப்பார். பொது இடம் ஒன்றில் சிலை அமைக்கப்பட்ட சிறப்பிற்குரிய ஒரே இந்திய விளையாட்டு வீரர் தயான்தான். தயான் சந்த் 1979ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் கல்லீரல் புற்றுநோயால் காலமானார்.