‘கணினி அறிவியல் மாணவர்கள் சமஸ்கிருத படிப்புகளில் சேருவதற்கான போக்கு அதிகரித்து வருகிறது’ என டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மதம் சார்ந்த படிப்பிற்கான துறையின் உதவி பேராசிரியர் லிபி மில்லிஸ் கூறியுள்ளார். மதம் சார்ந்த படிப்பில் ஹிந்து மதம், புத்தம், சீக்கியம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு மாணவர்கள் சமஸ்கிருதத்தை கற்கிறார்கள். இதை குறித்து ஆராய்ந்தபோது, 40 மாணவர்களில் ஆறு பேர் மென்பொறியாளர்கள் என்று மில்ஸ் கண்டறிந்தார். ஏனெனில், சமஸ்கிருதத்திற்கும் கணினி அறிவியலுக்கும் இடையிலான மொழி தொடர்பை விரிவாகப் படிக்க கடந்த காலங்களில் முயற்சிகள் நடந்துள்ளன. 1985ல் நாசா விஞ்ஞானி ரிக் பிரிக்ஸ் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். அதில் சமஸ்கிருதம் மிகவும் பழமையான மொழி, இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நிரலாக்க, இலக்கண விதிகள் நிறைந்த சிறந்த மொழியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.