சங்கம் இழந்த மாணிக்கம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் தமிழக துணைத்தலைவர் திரு பி.எம் ராமகிருஷ்ணன். இவர் சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் ஆர்.எஸ்.எஸ்சில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து திறம்பட வழி நடத்தியவர். இவரது குடும்பமே சங்கக் குடும்பம். இவர்கள் தங்கள் வாழ்வையே சங்கத்திற்கு அர்பணித்தவர்கள். இவரும் இவரது சகோதரர்களான ரவிக்குமார், நாகராஜன் ஆகியோரும் சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்சில் பிரசாரகர்களாக இணைந்தனர். இதில் தற்போது ரவிக்குமார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வடதமிழக பிரசாரகராகவும். நாகராஜன் வி.எச்.பி தென் பாரத அமைப்பாளராகவும் உள்ளனர்.

அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

2 thoughts on “சங்கம் இழந்த மாணிக்கம்

  1. அவரின் மறைவு மிக்க வருத்த த்தை அளிக்கிறது .1980 களில் சங்கம் அறிமுகமான என் போன்ற பலருக்கு சங்க வேலை செய்ய உத்வேகம் கொடுத்தவர் அவர் .

  2. சங்க வேலைகளை மிகவும் சிறப்பான முறையில் செய்தவர் திரு.B.M.R ஜி( பி.எம். இராமகிருஷ்ணன் ஜி). அனைத்து சங்க நிகழ்ச்சிகளிலும் சுறுசுறுப்பாக இருந்ததை நாங்கள் மீண்டும் மீண்டும் நினை வுபடுத்திக்கொள்வோம்.ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *