கோவில் கடை வாடகை பாக்கி

தேவராஜ முதலி தெருவில் உள்ள, சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில்கள், 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இக்கோவில்கள், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இக்கோவிலுக்கு சொந்தமாக, 144 கடைகள் உள்ளன.இந்த கடைகளில் வாடகைக்கு இருப்பவர்கள், நான்கு ஆண்டுகளாக, 3.24 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும், குறிப்பிட்ட கெடுவுக்குள் வாடகை செலுத்தாவிட்டால், காலி செய்ய வேண்டும் என, செயல் அலுவலர் ஜெயராமன், ‘நோட்டீஸ்’ கொடுத்துள்ளார். 70 கடை உரிமையாளர்கள், 1.20 கோடி ரூபாய் வாடகை கொடுத்துள்ளனர். மீதமுள்ள, 70க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள், 2 கோடி ரூபாய் வாடகை செலுத்தவில்லை. அவர்கள், 30க்கும் தேதிக்குள் செலுத்தவும், தவறினால், கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும், கோவில் நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் சென்னை உயர் நீதி மன்றம்செயல்படும் இடமும்  ஏற்கனவே சென்ன கேசவ பெருமாள் கோவில் இருந்த இடம் தான் கோவிலை இடித்து விட்டு அந்த இடத்தில தான் நீதிமன்றம் கட்டபட்டுள்ளதுஅப்படி என்றால் மல்லிஸ்வரர் கோவில் நிலத்தில் தான்  நீதி மன்றம் உள்ளது. அதனால் தான் ஆண்டுக்கு ஒருமுறை நீதி மன்றதை பூட்டி சாவியை கோயிலில் கொண்டு ஒப்படைக்கும் பழக்கம் நடை முறையில் உள்ளது ஒருக்கு நீதி சொல்லும்  நீதி மன்றமே நி வாடகை செலுத்துகிராயா? என்பது பக்தர்களின் கேள்வியாக இருக்கிறது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *