சிவகங்கையில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது ஸ்ரீ கௌரி விநாயகர் கோயில். இக்கோயிலுக்கு சொந்தமாக தஞ்சாவூர் – பைபாஸ் சாலையில் உள்ள காஞ்சிராங்கால் கிராமத்தில், ரூ. 50 கோடி மதிப்புள்ள 11 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் பினாமி எனக் கருதப்படும் பாண்டி என்பவர் ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டியுள்ளார். இது குறித்த பல புகார்கள் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து, அதிகாரிகள் அந்த நிலத்தை மீட்டு கட்டடத்திற்கு சீல் வைத்தனர். மேலும், அவ்விடம் ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது என அறிவிப்புப் பலகையையும் வைத்தனர். கோயில் நிலத்தை அபகரித்தவர் முன்னாள் அமைச்சரின் பினாமி என கூறப்படும் நிலையில் அந்த பினாமி, முன்னாள் அமைச்சர், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.