தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 652 கோயில்கள் உள்ளன. கோவில் நிர்வாகத்திற்காக, ஆணையர், அலுவலர்கள், சார்நிலை அலுவலர்கள், செயல் அலுவலர்கள், உதவியாளர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் என 2,409 பணியிடங்கள் உள்ளன. இது தவிர அந்தந்த கோயில் சார்பில், பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில் காலிப் பணியிடங்கள் நிரப்ப விடுக்கப்பட்ட தொடர் கோரிக்கையை ஏற்ற அறநிலையத்துறை கமிஷனர், அத்தியாவசிய தேவைக்கேற்ப கோயில் நிதிக்கு இழப்பு ஏற்படாத வகையில், பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். கோயிலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு அளவீடுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என கூறி காலிப்பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் உத்தரவிட்டார்.