கொள்கையை சுட்டிக் காட்டிய பண்பு: மகான்களின் வாழ்வில்

டாக்டர் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஸ்தாபகர். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தினசரி ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மணி நேரம் சந்திப்பதற்கு ஷாகா என்று பெயர். நாகபுரியில் முதல் ஷாகாவைத் துவக்கி படிப்படியாக நாடு முழுவதும் ஷாகா அமைப்பைத் துவங்கினார். அவர் தினசரி ஏதாவது ஒரு ஷாகாவிற்கு சென்று வருவார். ஷாகா முடிந்த பிறகு அதில் பங்கு கொண்டவர்களின் வீடுகளுக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஒருநாள் ஷாகா முடிந்த பிறகு ஒரு மாணவனின் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு சுவரில் ஒரு பிரபலமான தலைவரின் படம் மாட்டப்பட்டு அதன் அடியில் ஒரு வாசகத்தை  அந்த மாணவன் எழுதி வைத்திருந்தார். டாக்டர் ஹெட்கேவார் அதைக் கவனித்தார்.

வழக்கம்போல் தேநீர் அருந்திவிட்டு அந்த வீட்டில் உள்ளவர்களுடன் அளவளாவிட்டு புறப்படுகிற நேரத்தில் அந்த மாணவரிடம்,  சுவற்றில் மாட்டியிருந்த படத்தைப் பார்த்தேன். நல்லது. ஆனால் அதன் கீழ் எழுதப்பட்டிருந்த ‘Teach us how to die’  என்பதற்குப் பதிலாக ‘Teach us how to Live’ என்று ‘மாற்றி எழுதி வையுங்கள்’ என்று ஆலோசனை கூறினார்.

ஒரு கொள்கைக்காக வீழ வேண்டும் என்பதற்குப் பதிலாக ஒரு கொள்கைக்காக வாழ வேண்டும் என்பதே பாரத தேசத்தின் பழம்பெரும் மரபு என்ற செய்தியை டாக்டர்ஜி  ரத்தினச் சுருக்கமாக சுட்டிக் காட்டினார்.

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *