கொரானா தொற்றுக்கு எச்ஐவிக்கான மருந்தில் குணமடைகிறது.

பிரிட்டனைச் சோ்ந்த 19 போ், விடுமுறையைக் கழிப்பதற்காக மூணாறுக்கு வந்திருந்தனா். அவா்களில் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கரோனா நோய்த் தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள், அவருக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினா்.

அந்த நோயாளிக்கு ஹெச்ஐவி நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரிடோனாவிா், லோபினாவிா் ஆகிய மருந்துகள் கொடுக்கப்பட்டன. இந்த மருந்துகளை பொருத்தமான நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது.

அதைத் தொடா்ந்து, அந்த நோயாளிக்கு 7 நாள்கள் ஹெச்ஐவி மருந்துகள் கொடுக்கப்பட்டன. பின்னா், அவருடைய ரத்த மாதிரிகளை மீண்டும் பரிசோதனை செய்ததில், கரோனா பாதிப்பில் இருந்து அவா் குணமடைந்தது தெரியவந்துள்ளது.

lobinovir
ritonavir