கேரள பிஷப் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

கேரள கத்தோலிக்க பிஷப் ஜோசப் கல்லாரங்கட் மீது அப்துல் அஜீஸ் மௌல்வி என்பவரின் ‘வெவ்வேறு இனத்தினர் இடையே பகையை வளர்க்கிறார்’ என்ற புகாரின் அடிப்படையில், பாலா (கோட்டயம் மாவட்டம்) மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

ஜோசப் கல்லாரங்கட் சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டு இருந்த் அறிக்கையில், ‘முஸ்லிமல்லாதவர்களை ஒழிக்க முஸ்லிம்கள் லவ் ஜிஹாத் மற்றும் போதைப்பொருள் ஜிஹாத் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். பாரதம் போன்ற ஒரு நாட்டில், ஆயுதங்களை எடுப்பதும் மற்றவர்களை அழிப்பதும் எளிதானது அல்ல என்பதால், அவர்கள் வேறு வழிகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் நோக்கம் அவர்களின் மதத்தை பரப்புவதும், முஸ்லிம் அல்லாதவர்களை முடிவுக்குக் கொண்டுவருவதுதான். ஜிஹாதிகளால் நடத்தப்படும் ஐஸ்கிரீம் பார்லர்கள், ஹோட்டல்கள், ஜூஸ் கார்னர்களில் முஸ்லீம் அல்லாதவர்களைக் கெடுக்க பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஜிஹாதிகள், காதல் அல்லது வேறு வழிகளில், பிற மதங்களைச் சேர்ந்த பெண்களை கவர்ந்து அவர்களை பயங்கரவாத நடவடிக்கைகள், பொருளாதார ஆதாயங்கள் போன்ற பல தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். ‘லவ் ஜிஹாத்’ இல்லை என்று நிரூபிக்க முயல்பவர்கள் அறியாமையைக் காட்ட முயல்கிறார்கள்’ என கூறியிருந்தார். சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் காரணமாக, பிஷப்பின் இந்த கருத்து தேசமெங்கும் அதிர்வலைகளை உருவாக்கியது, கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரசும் பிஷப்பின் கருத்தை எதிர்த்தன. பா.ஜ.க அவரின் கருத்தை ஆதரித்தது.