குளச்சல் போர் வெற்றி தினம்

டச்சு படையை வென்ற 281ம் ஆண்டு போர் வெற்றி தினத்தை முன்னிட்டு குளச்சல் போர் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள், பொதுமக்கள் வீர வணக்கம் செலுத்தினர். இதனை முன்னிட்டு நேற்று மெட்ராஸ் 11வது ரெஜிமெண்ட் சார்பில் வெற்றி தூணிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. திருவனந்தபுரம் பாங்கோடு கமாண்டர் பிரிகேடியர் லலித்சர்மா, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தேவவரம், ஓய்வு பெற்ற பிரிகேடியர்கள் உள்ளிட்ட முன்னாள் ராணுவத்தினர், ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், காவல் அதிகாரிகள், நகராட்சி ஆணையர், பொதுமக்கள் உள்ளிட்டோர் வெற்றித்தூணுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.