குடும்பமே குழப்பும்; குடும்ப குழப்பம்

நடிகர் விஜய்க்கு தெரியாமல் அவர் தந்தை சந்திரசேகர் கட்சி ஆரம்பித்ததும், இதை செய்திகள் வாயிலாக நான் கேள்விப்பட்டேன், அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விஜய் அறிக்கை விட்டார். உடனே எனக்கு பிடித்த நடிகர் பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளேன் என அவரின் தந்தை பூசி மொழுகியுள்ளார். இதுதான் தற்போது சமூகவலைதளங்களில் பரபரப்பான விவாதப்பொருளாக உள்ளது. ஆனால் இது ஒன்றும் புதிதல்ல.

ஏற்கனவே ஒருமுறை தனியார் தொலைக்காட்சியில் விஜய்யின் தாயார் தன் மகனை கட்டியணைக்க விரும்புவதாக தெரிவித்தார். பின் விஜய் மேடை ஏறி வந்து தன் தாயை கட்டியணைத்தார். இதை பார்த்த மக்களும் நெகிழ்ச்சியடைந்து கைத்தட்டினர்!!!.

இதில் இருந்து நமக்கு புலப்படுவது, ஒன்று இது அவர்கள் திட்டமிட்டு நடத்தும் நாடகமாக இருக்கலாம். அல்லது அவர்கள் குடும்பத்துக்குள் சூமூகமற்ற சூழல் நிலவுவதை இது வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *