பிரதமர் மோடி பதவியேற்றவுடன் இரண்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு, அது சட்ட ரீதியாக
ஆக்கப்பட்டது. 70 ஆண்டுகளுக்கு மேலாக அமுலிருந்த அரசியல் ஷரத்து 370 நீக்கப்பட்டது, குடியுரிமை திருத்த சட்ட மசோதா வின் மூலம் பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்துள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு குடியரிமை வழங்கும் சட்ட திருத்த மசோதா சட்டமானது. இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்திற்குட்பட்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், தங்களுக்கு ஆதரவாக ஐ.நா.வில் குரல் கொடுக்க இஸ்லாமிய நாடுகளின் கூட்டமையினர்
முன் வரவில்லை என்கின்ற ஆதங்கம் உண்டு, அதன் வெளிப்பாடுதான் பாகிஸ்தான், சவுதி அரேபியா நாடுகளுக்கிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5-ந் தேதி ARY News தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலில் , இந்தியாவிற்கு எதிராக சவுதி அரேபியா பேச வேண்டும். காஷ்மீர் பிரச்னையில், சவுதி அரேபியா இஸ்லாமிய நாடுகள் அனைத்தையும் ஒன்று திரட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக ஓ.ஐ.சி எனப்படும் இஸ்லாமிய நாடுகளின்
கூட்டமைப்பை கூட்ட வேண்டும் என பாகிஸ்தான் சவுதி அரேபியாவிடம் கோரிக்கை வைத்தது. பாகிஸ்தானின் கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்து விட்டது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி பேசினார். மேலும் காஷ்மீர் விஷயத்தை தேவையில்லாமல் சவுதி அரேபியா தள்ளி போடுகிறது. சவுதி அரேபியா ஓ.ஐ.சி. கூட்டத்தை கூட்ட முடியாது என்று கூறினால், நாங்கள் கூட்ட தயாராக இருக்கிறோம் . காஷ்மீரில் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சவுதி அரேபியா கண்டும் காணாமல் இருக்கலாம், நாங்கள் அவ்வாறு இருக்க முடியாது. 57 இஸ்லாமிய நாடுகள் எங்கள் பக்கமிருக்கிறது. சவுதி தயாராக இல்லை என்றால், பிரதமர் இம்ரான் கான் மூலம்
கூட்டத்தை நடத்துவோம் என சவுதியை மிரட்டும் தொனியில் போசினார். இந்த மிரட்டலுக்கு பின்னர், சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு கொடுத்த ஒரு பில்லியன் டாலர் கடனை திரும்ப வாங்கியது. மேலும் கொடுத்த ஒரு பில்லியன் டாலர் கடனை உடனே திருப்பி செலுத்த கேட்டுள்ளது. அதே போல் எண்ணெய் முதலீடு 3 பில்லியன் டாலரை கொடுக்க முடியாது என மறுத்து விட்டது. பாகிஸ்தான் வெளியுறவு
அமைச்சரின் மிரட்டலுக்கு சவுதி கொடுத்த மரண அடியாகும். இனிமேல் உங்களுக்கு கடன் தர முடியாது. சீனாவிடம் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டது.
கலக்கம் அடைந்த பாகிஸ்தான் சவுதி அரேபியாவை சமாதானப்படுத்த, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவேத் பஜ்வா மற்றும் ஐ.எஸ்.ஐ. யின் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் இருவரும் சந்திக்க முற்பட்டார்கள். பஜ்வா சவுதி அரேபியாவின் துணை பாதுகாப்பு மந்திரி இளவரசர் காலித் பின் சல்மான் மற்றும் சவுதி அரேபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் ஃபயத் பின் ஹமீத் அல்-ருவாய்லி ஆகியோரை சந்தித்த போதிலும், அவர் பட்டத்து இளவரசரை சந்திக்க தவறிவிட்டார் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் ராணுவ தளபதியை சந்திக்க மறுத்தவிட்டதாக செய்திகள் வெளி வந்துள்ளன. 2019-ல் பாகிஸ்தான் மாலத்தீவு அதிபரை துணைக்கு அழைத்த போது, மாலத்தீவுகளின் ஐ.நா. பிரதிநிதி
தில்மீஸா ஹூசைன் பாகிஸ்தானின் கோரிக்கையை மறுத்தது மட்டுமில்லாமல், தனித்தனியான கூற்றுக்கள், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்த்தகவல்கள் 130 கோடி இந்தியர்களின் உணர்வுகளை பிரதிபலிக்காது என கூறி பாகிஸ்தானுக்கு அடி கொடுத்தார்.
ஐ.நா.வில் 60 முஸ்லீம் நாடுகளின் ஆதரவு தமக்கு இருப்பதாக இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தாலும், உண்மையில் காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள் என்றால் துருக்கி மற்றும் மலேசியாவை தவிர வேறு நாடுகள் கிடையாது. 2019-ல் மலேசியாவில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டு கூட்டத்தில், சவுதி அரேபியாவின் நிர்பந்தம் காரணமாக பாகிஸ்தான் கலந்து கொள்ளவில்லை. 2018-ல் அபுதாபியில் நடந்த முஸ்லீம் நாடுகளின் வெறியுறவு துறை அமைச்சர்கள் மாநாட்டில் சிறப்பு பார்வையாளராக இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் திருமதி சுஜ்மா சுவராஜி கலந்து கொள்வதை தடுக்க பாகிஸ்தான் பல வழிகளில் முயற்சியை மேற்கொண்டது. தனது முயற்சி தோல்வியில் முடிந்ததால், அந்த மாநாட்டில் பாகிஸ்தான் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது. பல ஆண்டுகாலமாகவே பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. எழுப்புவதும், 1948-ல் ஐ.நா.சபையின் தீர்மாணத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதும், அதற்கு ஐ.நா.வின் உறுப்பு நாடுகளிடையே போதிய ஆதரவு கிடையாது. காஷ்மீரில் முஸ்லீம்களின் மனித உரிமை அப்பட்டமாக மீறப்படுகிறது, இது பற்றிய முழு விவாதம் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா.மனித உரிமை கவுன்சிலிடம் 60 முஸ்லீம் நாடுகளின் தலைவர்களிடம் கையெழுத்து பெற்று மனு அளித்தும் கூட, மனு நிராகரிக்கப்பட்டது. ஏன் என்றால் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு கையெழுத்திட்ட நாடுகள் வெளிப்படையாக ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் விவாதிக்க முன் வரவில்லை. பல நேரங்களில் பாகிஸ்தான் ஐ.நா.சபைக்கு அளிக்கும் மனுவில், காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தானை ஆதரிக்கும் நாடுகளின் பெயர்களை குறிப்பிடுவதில்லை, மாறாக முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பு என குறிப்பிட்டே கொடுப்பதால், இருநாடுகளை தவிர மற்ற நாடுகள் ஆதரிப்பதில்லை. உலகிலேயே அதிக முஸ்லீம்கள் வாழும் நாடான இந்தோனேஷியா பாகிஸ்தானின் கோரிக்கைக்கு உடன்படாமல், சற்று விலகியே இருக்கிறது.
முஸ்லீம் நாடுகளில் முக்கியமான நாடான லிபியாவின் கட்டாஃபி, ஈராக்கின் சதாம் ஹூசைன் ,
டெமாஸ்கஸூம் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெளிவாக கூறியதால், பாகிஸ்தான் அவர்களிடம் எந்த கோரிக்கையும் வைப்பதில்லை. எகிப்து நடுநிலை வகிக்கின்றது, பங்களா தேஷ் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும் சூழ்நிலையில் முஸ்லீம் நாடுகளின் கூட்டமைபின் நிர்வாகத்தை சீர்திருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்திருப்பதால், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க இயலாது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் We can’t even come together as a whole on the OIC meeting on Kahsmir என டான் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதை கவனித்தால், முஸ்லீம் நாடுகள் காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், முஸ்லீம் நாடுகளில் முக்கியமாக எண்ணெய் உற்பத்தி செய்யும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சும், சவுதி அரேபியாவும் இந்தியாவுடன் நட்பு நாடாக மாற தொடங்கியது. இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளும் கூட்டாக சேர்ந்து, இந்தியாவில் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான ரிபைனரி ஆலை துவங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும். இந்த ஆலையை உருவாக்க இந்திய தொழிலாளர் ஆயிரக்கணக்கில் பணியாற்றுகிறார்கள். நல்ல வர்த்தக உறவை ஏற்படுத்தவே இந்த இருநாடுகளும் இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த முயலுகின்றன. மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது நாட்டின் உயரிய விருதான Order of Zayed என்பதை மோடிக்கு வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. எனவே முஸ்லீம் நாடுகள் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு செவிமடுப்பதில்லை. மற்ற முஸ்லீம் நாடுகள் விலகியே இருப்பதற்கு முக்கியமான காரணம் கடந்த 50 வருடங்களாக காஷ்மீர் பிரச்னையில் பயங்கரவாத அமைப்பை உருவாக்கி, பயிற்சி அளிக்கும் நாடு பாகிஸ்தான் என்பதும், இந்தியாவில் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்பது உலகறிந்த விஷயம் என்பதால் எந்த முஸ்லீம் நாடும் கண்டுகொள்வதில்லை.