கார்கில் நாயகன் வாஜ்பாய்

பாரத தேசத்தை 5 ஆண்டுகள் முழுதாக ஆட்சி செய்த, முதல் காங்கிரஸ் அல்லாத தலைவர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் வாஜ்பாய். பொக்ரான் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தி அணு ஆயுத வல்லரசாக பாரதத்தை மாற்றியவர் வாஜ்பாய். இவரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய தொலைதொடர்பு கொள்கை பாரதத்தின் தொலைதொடர்பு வளர்ச்சியை 3 சதவீதத்தில் இருந்து 70 சதவீதத்திற்கு உயர்த்தியது. அவரின் ‘சர்வ சிக்ஷா அபியான் திட்டம்’ கல்விதுறையில் செய்யப்பட்ட மிக முக்கியமான மாற்றம். டெல்லி – லாகூர் இடையே முதல் மக்கள் போக்குவரத்து துவக்கி முதல் ஆளாக பயணித்தார் அடல்ஜி. தங்க நாற்கர திட்டத்தில் உலகத்தரமான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கினார். பழங்குடி சமூக நலன், சமூக நீதி அமைச்சகம், வடகிழக்கு பகுதிக்கு தனித் துறை என்று பல புதிய விஷயங்களை புகுத்தியவர் வாஜ்பாய். சர்வதேச உறவுகளை மேம்படுத்துவது, தனியார் நிறுவனங்கள் மற்றும் அந்நிய மூதலீடு ஊக்குவிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தினார். எழுத்திலும் முத்திரை பதித்தார் வாஜ்பாய். பாஞ்சஜன்யா, ராஷ்டிரதர்மா ஆகிய இந்தி மாத இதழ்களிலும் அர்ஜுன், ஸ்வதேஷ் ஆகிய நாளேடுகளிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். பல கவிதை நூல்களையும் சுயசரிதையையும் எழுதினார்.