காஞ்சிபுர அத்திவரதர் சேவா

சேவாபாரதியின் பிரமுக் பிரகாஷ் கூறும் கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ் , சேவா பாரதி , ஹிந்து முன்னணி போன்ற அமைப்புக்களின்   உறுதுணையோடு  மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பாராட்டும்படி மேற்கொண்டனர்.“வைபவத் தொடக்க நாட்களுக்கு முன்னரே தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து  சுமார் 4000 தன்னார்வ தொண்டர்கள் நேரிலும் தபால் மூலமும்  பதிவு செய்து இருந்தனர். பதிவிற்கு வேண்டிய ஆதார் கார்டுகள் போன்றவற்றை சமர்ப்பித்தபின்னர் பதிவு விறுவிறுப்பு கண்டது. தனியாகவோ, குழு மூலம் எத்தனை பேர்களோ அவர்கள்/ எத்தனை நாட்கள் ஸ்வய சேவகம் மேற்கொள்ள விழைகிறார்கள் போன்ற பட்டியலை தயார் செய்தோம். சேவா பாரதி மூலம் மட்டுமே தினப்படியாக   சுமார் 200 பேர் களத்தில்  முழு வீச்சில் பணி  புரிந்தனர்.  . சக்கர நாற்காலிகளில் கோபுர வாயிலில் இருந்து வசந்த மண்டபம் வரை  பக்தர்களைக் கொண்டு விடும்/பின்னர் மீண்டும் கோபுர வாசலில் கொண்டு விடுதல், குடிக்க மினெரல் வாட்டர் விநியோகம்அன்னதானம், ஏற்பாடுகள் செய்யப்பட்டது.பணியில் சிலர், பெருமாள் தீர்த்தம் துளசி பிரசாதம் வழங்க சிலர் என்று பல குழுக்களாகச் செயல்பட்டோம். “உடம்பு முடியாதவர்கள், மூத்த குடிமக்கள்  போன்ற பலரின் நன்மை கருதி சுமார் பத்து பாட்டரி கார்கள்  தொடர்ந்து  இயங்கியது. மொத்தத்தில், பக்தி நெறி மேலும் வலுப்பட அத்தி வரதர் விழா வழி வகை செய்துள்ளது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *