மகாத்மா காந்தி பாரதத்தின் தவப்புதல்வன் என்று போபால் எம்.பி. பிரக்யா தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். பகவான் ராமர், சத்ரபத்தி சிவாஜி, மஹாராணா பிரதாப் போன்று காந்தியும் பாரத மாதாவின் புதல்வர். இவர்கள் அனைவரும் இந்த நாட்டிற்காக போற்றுதலுக்குரிய செயல்களை செய்திருக்கிறார்கள்.
இந்த மகான்கள் வகுத்த பாதையில் நாங்கள் பயணிக்கிறோம். எங்களுக்கு தேசமே முதன்மையானது. நாங்கள் நல்லதை பாராட்டவும், தவறானதை விமர்சிக்கவும் தவறியதில்லை. எங்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்தார்.