நான் தேர்தல் ஆணையத்தை நம்பவில்லை, காவல்துறையை நம்பவில்லை, உச்சநீதிமன்றத்தை நம்பவில்லை என்று இந்திய நிறுவனங்கள் மீது அவதூற்றை அள்ளி தெளிக்கிறார் கரப்பான் கட்சியின் அபிஜித் திப்கே… மாணவர் போராட்டத்தால் வங்காளதேசத்தில் நடந்த ஆட்சி மட்டுமே எங்கள் போராட்டத்திற்கான உந்து சக்தி என்கிறார் நேஹா போரா. அங்கு கொத்துக்கொத்தாக இந்துக்கள் கொல்லப்பட்டார்கள். ஆட்சி மாற்றம் அங்கு பின்னடைவே உருவாக்கி இருக்கிறது.
இந்திய எதிர்காலம் இனி நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்படாது, தெருக்களில்தான் முடிவு செய்யப்படும் என்கிறார் யோகேந்திர யாதவ் என்ற பெயரில் உலவும் சலீம் பாய். ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை, நாங்கள் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று உச்ச ஸ்தாயில் கத்துகிறார், எப்போதுமே தேச விரோத ரோஹிங்கியா மற்றும் நக்சல்களுக்கு ஆதரவாக வாதாடும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.
மூன்று இடங்களில் வாக்காளர் அட்டை வைத்திருந்து, எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை காரணமாக, அவை பறிக்கப்பட்ட கோபத்தில், ‘ நம்பிக்கையே இல்லாத நாட்டில் எப்படி வாழ்வது,’ என்று கேள்வி எழுப்புகிறார், அல்லேலூயா நடிகர் பிரகாஷ்ராஜ். இந்திய நாட்டின் காவல்துறையும், ராணுவமும் மத்திய அரசுக்கு எதிராக புரட்சியில் இறங்க வேண்டும் என்கிறார், ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற இந்தியா வந்திருக்கும் ஜெர்மனியில் வசிக்கும் துருவ் ரத்தே.
தலைவராக தங்களை தாங்களே கூறிக் கொள்ளும் இவர்கள் யாரும் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை, அந்த மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தை கூறப்போவதில்லை. இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால், ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு இந்தியாவை சீர் கெடுப்பதற்காக களம் இறக்கப்பட்டவர்கள் தான் இவர்கள்.
இவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தேர்வு செய்யும் நாட்களே அந்த உண்மையை புரிய வைத்துவிடும். சுதந்திர தின வேளையில், வினாத்தாள் கசிவு போராட்டம். நவராத்திரி விஜயதசமி தீபாவளி நாட்களில் தேர்தல் ஆணைய எதிர்ப்புப் போராட்டம். சென்ற முறை இவர்களால் வேறு உருவில் நடத்தப்பட்ட வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம், குடியரசு தினத்தின் பொழுது… ஆக, இவர்களின் இலக்கு வளர்ந்து வரும் பாரதம், பாரதம், பாரதம் மட்டுமே!
இந்நிலையில், உடனடித் தேவை கரப்பான் ஒழிப்பு நடவடிக்கை. அரசு மட்டுமே இதை செய்ய முடியாது என்பதால், சமுதாயமும் இணைந்து தான் இதை செய்ய வேண்டும் என்பதே நம் விண்ணப்பம்.