சென்னை மயிலாப்பூர், தெற்கு மாட வீதியில் இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் யாதவ மகா சபை தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு, கடவுள் இல்லை என்பவன் முட்டாள், ஆன்மிகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி என வைக்கப்பட்டிருந்த பேனரை போலீசார் துணையோடு, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் இந்த செயலை கண்டித்து, இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் யாதவ மகா சபை, இந்து முன்னணி, பா.ஜ. அமைப்பினர் இணைந்து அமைதிப்பேரணி நடத்தி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குள் சென்று சுவாமியிடம் மனு அளிக்கும் போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற போது போலீசாருடன் போராட்டக்காரர்களுக்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. தடுப்பு வேலியை தாண்டி போராட்டம் நடத்திய 5௦க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்தனர்.