டொனால்ட் டரம்ப் அதிபராக இருந்த போது பாரதம் அமெரிக்காவிடம் இருந்து கடற்படைக்காக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 127 மி.மீ மார்க் 45 ரக பிரங்கிகள்பதிமூன்றை பி.ஏ.இ நிறுவனத்திடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. இவற்றில் இந்திய கடற்படையின் விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பல்களில் 4 மற்றும் நீலகிரி ரக ஃப்ரிகேட்களில் 7 என பொருத்த திட்டமிட்டு இருந்தது. தற்போது பாரத அரசின் நிறுவனமான பாரத கனரக மின்னனு நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரங்கிகளை இதற்கு பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்கா உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.