ஒரு தாயின் உருக்கம்

மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருவதை மக்கள் நேரடியாகவே உணர்ந்துள்ளனர். இந்நிலையில் உத்தரபிரதேசம், மணிப்புரி பகுதியை சேர்ந்த பிதன்தேவி எனும் 85 வயதான மூதாட்டி தங்கள் பகுதி வழக்கறிஞரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எனக்கு மூன்று மகன்கள் உள்ளனர். ஆனால் யாரும் என்னை பார்த்துக்கொள்வது இல்லை. மோடியால்தான் எனக்கு மாதம் 2000 பென்ஷன் வருகிறது. அதனால்தான் நான் வாழ்ந்து வருகிறேன். அவர் மக்களுக்கு  பல நன்மைகள் செய்துள்ளார். எனவே நான் என்னுடைய 4 ஏக்கர் நிலத்தை அவருக்கு அளிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது பரபரப்பாகி வருகிறது.