ஒரு சமுதாயம் இரு சமய செயல்வீரர்கள்

பாஸ்கர் : மது,  எனக்கு ரொம்ப நாளா  ஒரு டவுட். அவதார புருஷர்ன்னா  யார் ?

மதுவந்தி:  சிம்பிள், பாஸ்கர்! சாதாரண மனுஷன் தங்கிட்டே இருக்கிற தெய்வீக சக்தியை முழுமையாய் பயன்படுத்தித் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுட் காலத்தை மிகப் பயனுள்ளதா செலவிட்டு, தன்னுள்ளே பொதிந்து கிடைக்கும்  அத்தனை திறமைகளையும் வெளிப்படுத்தி, கடோசியா பிறப்பு இறப்பு சுழலிலிருந்து விடுபடும் ஞானம் பெறுகிறாேன, அப்போது அவன்  அவதாரம்।

பாஸ்கர் : ஹிந்து மரபின்படி, நம்மால் கற்பனை செய்து  பார்க்கமுடியாதபடி, அரிய பல செயல்களைச்செய்த ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் இவர்கள் எல்லாம் அவதார  வகையா?

மது : பாஸ்கர், நாம் எல்லாம் கார்த்தாலே எந்திச்சு, பல் விளக்குவதிலிருந்து   இரவு  தூங்கப்
படும் வரை நம்மை மட்டுமே கவனித்துக்கொள்ளும் ஜென்மங்களாகவே காலம் தள்ளி வருகிறோம்। நம் மனது சொல்வதைக்கூட செய்ய முடியாமல் குழப்பத்தில் வாழ்ந்து மடிகிறோம்। ஆனால், சொல்வதன் சிறப்பு செயல்ல தான் இருக்கு, தெரியுமோ   அதன்படி வாழ்ந்த ஞான சூரியர்கள் ஆதி சங்கரர், ராமானுஜர்। ஆகவே, அவதார புருஷர்கள்.

பாஸ்கர் : பொதுவா, இவர்கள் வாழ்ந்த கால கட்டத்துல சமூக அரசியல் நிலைமை எப்படி?

மது : சொன்னா ஆச்சர்யப் படுவாய், அப்போ, சுமார் 72 துர்மதங்கள் ஜனங்களைக் கலக்கிண்டிருந்தன।।  எதத்  தின்னா பித்தம் தெளியும் என்று மக்கள் திருந்த கால கட்டம்।। அது சங்கர் அவற்றை வாத்தால் வென்று அன்றே ஒரு சமய ‘ஸ்வச்ச பாரத்’ நடத்தினார்.

பாஸ்கர்: ராமானுஜர் மகா புரட்சியாளர் என்று சொல்றாங்களே ? சங்கரர் கூறின த்வைதம் மாதிரி இ வரும் ஒரு கொள்கை தந்தாரா?

மது: அறிவாளிகளின் தத்துவ விசாரணையாக இயங்கி வந்த விஷயத்தை எல்லாம் ஒரு பொதுஜன இயக்கமாக மாற்றி  சமுதாயத்தையே கை தூக்கிவிட்ட மஹான்।

பாஸ்கர்: திவ்ய பிரபந்தம் எனும் தமிழ் மறை வளர்ச்சி, ஹரிஜனப் பிரவேசம் போன்றவற்றில் கூட ராமானுஜர் புரட்சி பண்ணிததாக சொல்றாங்களே।

மது: பாஸ்கர், இப்போதுதான் நீ பாஸ் மாதிரி புரிஞ்சிண்டு கேள்வி கேட்கிறே?

தீண்டாமை ஒழிப்பு சட்டரீதியாக, வருமுன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே  ஆலயங்களில் ஹரிஜனப் பிரவேசத்துக்கு வழி வகுத்துட்டு,  சென்றவர் இவர்। இவ்வளவு ஏன், ராமராஜ்யம் என்று காந்தி
யடிகள் சொன்னாரே! அது ராமானுஜர் வகுத்த வைஷ்ணவ மதத்தின் அரசியல் வியாக்கியானம்। தமிழ் மறை வளர்ச்சிக்கு பலத்த அடித்தளம் போட்டவரும் இவர்தான்।

மது : சங்கரர்   போதித்த அத்வைத சித்தாந்தத்துக்கு அவரே தகுந்தவரான்னு அப்போ சோதனை எல்லாம் பண்ணி இருப்பார்களே।

மது: போற போக்கப் பார்த்தா, அத்வைத சித்தாந்தத்துக்கு, நீயே உரை எழுதிவிட்டுதான் போவாய் போல உள்ளது. சங்கரரையே புரட்டிப்போட்ட சம்பவம் அது, காசி நகரத்தில் நடந்தது. ஒருமுறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்களுடன் திரும்பும்போது நாய்கள் சூழ தாழ்ந்த ஜாதிக்காரராகக் கருதப்பட்ட ஒருவர், எதிரே முன்னே வருகிறார். அதைக் கண்டு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர். அப்போது அம்மனிதர் சங்கரரிடம் “என் உடல் நகரனுமா ஆன்மாவா” அல்லது ‘நீர் விலகிப்போகச் சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மாவையா? எதை விலகிப் போகச் சொல்கிறீர்கள்? மண் பாத்திரத்தில் இருந்தாலும், தங்கக் குடத்தில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீர் தானே? அது தன் இயல்பில் இருந்து மாறுவது இல்லையே. அதுபோலவே மனிதர்களோ, விலங்குகளோ, தாவரங்களோ அனைத்திலும் இருப்பது ஒன்றேயான அந்தப் பிரம்மம்தானே? அப்படி இருக்கும்போது, என்னுடைய உடலில் இருக்கும் அதே பிரம்மம்தானே தங்களுடைய உடலிலும் இருக்கிறது. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லையே. என்னை ஏன் விலகிப் போகச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டார்.  சங்கரர் அவர் காலில் விழுந்து பணிகிறதாக சங்கர சரிதம் கூறுகின்றது.

பாஸ்கர்: நடையாய் நடந்தே இவர்கள் சஞ்சாரம் செய்தார்களாமே?

மது: அன்று அவர்கள் நடையாய் நடந்து உபதேசங்களை அள்ளி வழங்கியதால்தான், நீ நடை பிணமாய் இல்லாமல் சத் சங்க விஷயங்களை தெரிந்து கொள்ள  கேள்விகளை முன் வைக்கிறாய். என் பதில் இன்னும் முடியவில்லை. ‘‘விடா முயற்சிக்கு சிலந்தி, கஜினி முகமது போன்றவற்றை எடுத்துக்காட்டும் சந்தை இயல் வல்லுநர்களுக்கு ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ ஆதி சங்கரர் போன்றோரை உதாரணம் சொல்ல ஏன் வாய் வரவில்லை? திருக்கோஷ்டியூருக்கு மந்த்ரோபதேசம் பெற்றிட முனைந்த வரலாற்றை ராமானுஜர் பள்ளிக்கூட புத்தகங்கள் முன்மொழியும் காலம் இனி வரும். 18ஆவது முறைதான் மந்த்ர உபதேசம் என்கின்ற இலக்கு சாத்தியமானது ராமானுஜருக்கு.

பாஸ்கர்: அப்போ, தங்களுக்குன்னு ஒரு பிராண்ட் வச்சு ஹிந்து சமயத்தை பரப்பினாங்கனு நான் நெனச்சது தப்பு  மது. கிணற்றுத் தவளை போன்று சுற்றிக்கொண்டிருந்த எனக்கு சற்றே ஞானக் கண் திறந்தாய் மது, நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *