ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்றே தீரும்

ஹிந்து சக்தி ஒன்றுபட்டால், வென்றே தீரும் என்பது பாரத தேசத்தின் தாரக மந்திரமாக இருக்கிறது. பீகாரில் ஒன்றுபட்ட ஹிந்து சக்தியினால், நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், மகத்தான வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது.

தேர்தலுக்கு முன், ‘வாக்கு திருட்டு’ என பொய் பிரச்சாரமும், ஊடுருவிய சட்டவிரோத முஸ்லீம்களும், உள்ளுர் முஸ்லீம்களும் ஒன்றே என கூறி செய்த விஷம பிரச்சாரமும் எடுபடவில்லை. ஹிந்துக்களிடையே பிளவை ஏற்படுத்தி , குளிர் காய்ந்த கட்சிகள், ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வெற்றி பெறும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டியுள்ளன.

வாக்காளர் சிறப்பு திருத்தத்தின் படி, ஊடுருவிய சட்டவிரோத முஸ்லீம்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டன. 60 தொகுதிகளில் முஸ்லீம்களின் வாக்கு வங்கி தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் சக்தியாகும்.

கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில், சாதியின் அடிப்படையில் ஹிந்துக்களிடையே பிளவுபடுத்தி வெற்றி பெற்றது. சங்கத்தின் தீவிர முயற்சியால், ஹிந்துக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி தேர்தலின் முடிவு மாறியது.

பாரதிய ஜனதா கட்சி, முஸ்லீம்கள் நிறைந்த மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக மற்ற கட்சிகளில் முஸ்லீம் உறுப்பினரையே வேட்பாளராக களத்தில் இறக்கியது. பாஜக, ஹிந்துவை வேட்பாளராக நிற்க வைத்து, ஹிந்து வாக்குகளை ஒற்றுமைப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் நடந்த மகத்தான சம்பவமாகும்.

முஸ்லீம் அதிகமுள்ள 12 மாவட்டங்களில், 76 சட்டமன்ற தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வன் கட்சியும் இணைந்து பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

‘மிஷன் திரிசூல்’ திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலுக்கு முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே தொடங்கியது. பிஹாரில் ஆர்.எஸ்எஸ். 50,000 முதல் 60,000 கூட்டங்களை நடத்தியதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 300 முதல் 500 கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தன.

இந்த கூட்டங்கள் பெரிய மேடை அமைத்து நடந்தவையல்ல, திண்ணை பிரச்சாரமும், ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து செய்த பிரச்சாரமுமாகும். பிஹாரில் உள்ள செல்வாக்கு மிக்க சமூகத்தின் தலைவர்களை தேச பணியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, மக்கள் சேவைப் பணிக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.

எவருடைய வாக்குரிமையும் பறிக்கப்படாமல், பிஹார் மாநில குடிமக்களாகிய வாக்காளர்கள் அனைவரும் 68 சதவீதம் (பாரத வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு) வாக்களித்து பாரதிய ஜனதா கட்சி கூட்டணியான என்.டி.ஏவுக்கு அமோக வெற்றியை வழங்கியிருக்கிறார்கள். இது அமைதியாக நடந்த புரட்சி ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்றே தீரும் என்பது நிரூபணமாகியுள்ளது.

-ஈரோடு சரவணன்