ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசாவின் கடற்கரைக்கு அப்பால் சந்திப்பூர் ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ), இந்திய கப்பற்படை கப்பலிலிருந்து செங்குத்தாக செலுத்தும் முறையில் தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் (வி.எல் – எஸ்.ஆர்.எஸ்.ஏ.எம்) குறைந்த தூர ஏவுகணை 2022 ஜூன் 24 அன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ராடாரில் காணமுடியாத இலக்குகள் உட்பட நெருக்கமான தூரங்களில் ஏற்படும் பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக கப்பலில் பொருத்தப்படும் ஏவுகணை இது. வெற்றிகரமான இந்த சோதனைக்காக டி.ஆர்.டி.ஓ அமைப்பு, இந்திய கப்பற்படை ஆகியவற்றிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். வான்வழி தாக்குதல்களுக்கு எதிராக இந்திய கப்பற்படை கப்பல்களின் பாதுகாப்பு திறனை மேலும் விரிவுப்படுத்துவதற்கான ஒரு சாதனம் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கப்பற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், டி.ஆர்.டி.ஓ தலைவரும் பாதுகாப்புத் துறை செயலாளருமான டாக்டர் ஜி சதீஷ்ரெட்டி ஆகியோரும் இந்த வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.