ஏமாற்றுவேலை

இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் – இலங்கை இனப் படுகொலைக்கு காரணம் என்ன? இலங்கையில் தீவிர ஹிந்துவாக இருந்த தமிழர்களைக் கொன்று குவித்த செயலுக்கு துணையாக இருந்தவர்கள், மத்தியில் ஆட்சியிலிருந்து சோனியாவின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டவர்கள். வெளிப்படையாகவே கிறிஸ்தவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தவர்கள். எனவே தமிழகத்தில் உள்ள ஹிந்துக்களை மத மாற்றம் செய்ய இலங்கையை ஒரு கருவியாக காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு விரோதமான திமுக, ஈழத்தமிழர் களைக் கொன்று குவித்தவன் ராஜபக்சே என தெரிந்தும், கண்டும் காணாமல் இருந்ததன் மர்மம் புரிகிறதா?

2014 மே மாதம் மோடி பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்ள ராஜபக்சேவிற்கு அழைப்பு அனுப்பிய பொழுது, மோடியை எதிர்த்த தமிழின காவலர்கள், தி.முக.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக கனிமொழி, டி.ஆர்.பாலு போன்றவர்களின் தலைமையில் ராஜபக்சேவைச் சந்தித்து, அவர் கொடுத்த பரிசு பொருள்கள் வாங்கியதை குறைகூட சொல்லவில்லையே!  இந்த முரண்பாடுதான் மத மாற்றத்திற்கு இடையூறாக இருக்கும் ஈழத் தமிழர்களை அழிக்கும் ஒரு திட்டத்தின் அடையாளம்.

அ.இ.அ.தி.மு.க. தங்களது தேர்தல் அறிக்கை, “இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழினப் படுகொலைகளுக்கு ராஜபக்சேவின் குடும்பமும், டெல்லியில் மைய ஆட்சியிலிருந்த காங்கிரஸ்- – தி.மு.க. கூட்டணி அரசும் விடுதலைப்புலிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்த அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி உள்ளிட்ட அவரது குடும்பமும்தான் முக்கிய காரணகர்த்தாக்கள்’’ என்கிறது. சமூக ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் அவர்கள் வெளியிட்ட வீடியோ பதிவுகளைக் காட்டி உறுதிப்படுத்துகின்றன. இந்நிலையில் “துரோகம் இழைத்த மேற்படி யார்களின் சார்பாக சிங்கள அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்து, வாழ்த்துக் கூறி, பரிசு பொருட்களை பெற்று வந்த கனிமொழி, டி.ஆர்.பாலு, திருமாவளவன் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வோம்” என அ.இ.அ.தி.மு.க. தனது இணைப்பு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *