ஏடாகூடம்

தேர்தலில் தோல்வியைத் தழுவிவிடு வோமோ என்ற அச்சத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6,000 வீதம் ஆண்டுக்கு ரூ.72,000 – ராகுல் அளக்கிறார்.

ராகுலுக்கு பொருளாதாரம் தெரியுமா? 2011ல் இவர்களின் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ரங்கராஜன் கமிட்டி தினசரி ரூ.42க்கு குறைவாக ஊதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை 454 மில்லியன் என்றதும் (மக்கள் தொகையில் 38.2 சதவீதம்). இந்த அறிக்கைக்கு மாறாக ராகுல் பேசுகிறார்! 50 மில்லியன் குடும்பம் எனவும், மக்கள் தொகையில் 20 சதவீதம் எனவும் தவறாக குறிப்பிட்டுள்ளார்.  காங்கிரஸ் கட்சியில் உள்ள பொருளாதார மேதைகளாக காட்டிக் கொள்ளும் ப.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் போன்றவர்களின் கருத்து என்ன ?

ராகுல்  கருத்துப்படியே நிதி வழங்க வேண்டுமானால் மாதம் ஒன்றுக்கு ரூ.30,000 கோடிக்கு மேல் செலவாகும், ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடி. ராகுலிடம் ஒரு நிருபர் நிதி எங்கிருந்து கிடைக்கும் என்று கேட்டார். முறையான, ஒழுங்கான பதில் கிடையாது.  ரஃபேல் போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியாததற்கு நிதியே காரணம் என அன்றைய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறியதை நினைத்தால்,  உள்நாட்டு பாதுகாப்பிற்கு ராணுவ தளவாடங்கள் வாங்க நிதி இல்லை என்ற காங்கிரஸ் கட்சியினருக்கு, உதவித்தொகை வழங்க ரூ.3 லட்சம் கோடிக்கு அதிகமான தொகை எங்கிருந்து கிடைக்கும்?

தமிழக முதல்வர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும் பத்திற்கு ரூ.2,000 நிதிஉதவி கொடுக்கப்படும் என அறிவித்தவுடன், அ.இ. அ.தி.மு.க. வாக்குக்கு பணம் கொடுக்கிறது என நீதி மன்ற படிக்கட்டுகளில் ஏறிய தி.மு.க.வுக்கு ராகுல் அறிவிப்பு விஷயத்தில் வாய் மூடிப் போயிற்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *