மூத்த சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கண்டித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் மகாராஷ்டிராவின் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடண்டா தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ தனஜி சாவந்தின் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். இதேபோல வேறு சில பகுதிகளிலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கோஷங்களும் போராட்டங்களும் சிவசேனா தொண்டர்களால் நடத்தப்பட்டது.