எடப்பாடியார் யார் பக்கம்

அ.தி.மு.க அரசின் முதல்வர் எடப்பாடியார், முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் இருந்து விமானம் விட மத்திய அரசை வலியுறுத்துகிறார். ஜெயராஜ் பெனிக்ஸ் குடும்பத்துக்கு அரசு வேலை, கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியர் நேரில் சென்று அனுமதி என கிறிஸ்தவர்களுக்கு வாரி வழங்குகிறார் ஆனால் ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் ஏன் அவர் ஓரவஞ்சனை காட்டுகிறார்?

உதாரணமாக கொரோனாவை காரணம் காட்டி தீபாவளி பட்டாசு வெடிப்புக்கு இரண்டு மணி நேரம். சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு தடை என ஹிந்துக்களின் மதவழிபாடுகளிள் கடுமை காட்டுகிறது எடப்பாடியாரின் அரசு. கந்த சஷ்டியை அவமானப்படுத்திய கருப்பர் கூட்ட விவகாரத்தில் மெத்தனம் காட்டும் தமிழக அரசு வேல் யாத்திரை அனுமதி மறுப்பில் வேகம் காட்டுகிறது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்கிறார் முதல்வர். ஆனால் ஹிந்து அறநிலையத்துறையின் அத்துமீறல்களை கண்டுகொள்ள மறுக்கிறார். டாஸ்மாக்கில் கூட்டத்தை அனுமதித்த எடப்பாடியார் ஹிந்துக்கள் முன்னோர்களுக்கு செய்யும் தர்பணத்தை தடுத்தது நினைவிருக்கலாம். தற்போது, ஹிந்து கோயில்களின் நிலங்களை பிடுங்கி அதை பட்டா போட்டு கொடுக்கவும் துணிந்துள்ளார் எடப்பாடியார்.

ஒரு ஹிந்துவாக இருந்தும், திமுக போன்ற மற்ற திராவிட கட்சிகளுக்கு சிறிதும் குறையாமல் ஹிந்துக்களுக்கு தொடர் துரோகமிழைக்கிறார் எடப்பாடியார். ஒரு முதல்வராக அவருக்கு மதசார்பின்மை தேவைதான் ஆனால் அதற்காக மாற்று மதத்தவர்களுக்கு மட்டும் கரிசனம் ஹிந்துக்களுக்கு துரோகம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *