ஏக்நாத் ராணடே

நாகபுரியில் டாக்டர் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ். ஆரம்பித்தபோது அவர் நடத்திய முதல் ஷாகாவில் ஸ்வயம்சேவகனாக இணைந்தவர் ரகுநாத் ரானடே. அவரது கடைசித் தம்பி ஏக்நாத் ரானடேயும் பின்னாளில் தன்னை ஆர்.எஸ்.எஸ்.ஸில் இணைத்துக் கொண்டார்.

ஏக்நாத் ராணடே, பாரதம் முழுவதும் பயணம் செய்து, தமிழ் நாட்டின் அடையாள சின்னங்களில் ஒன்றான விவேகானந்தரின் மண்டபத்திற்கான பொதுமக்களின் ஆதரவை திரட்டினார். பல கட்சித் தலைவர்களையும் அதற்கு ஆதரவு தெரிவிக்க வைத்தார்.

அவருடைய அயராத உழைப்பின் காரணமாக இன்று ஸ்ரீபாத பாறையில் விவேகானந்தரின் நினைவு மண்டபம் கம்பீரமாக நிற்கிறது.  ஸ்வாமிஜியின் சிந்தனைகளைத் தொகுத்து ” ஹிந்து ராஷ்டிரத்திற்கு ஒரு அறைகூவல்” புத்தகத்தையும் ரானடே வெளியிட்டார்.

மணிமண்டபம்  கட்ட திட்டம் உருவானபோது ஆர் எஸ் எஸ்ஸின் சார்பாக அமைக்கப்பட்ட குழுவின் செயலாளர் பொறுப்பு ரானடேவுக்கு வழங்கப்பட்டது.

அரசியல்வாதிகள் உட்பட பலரின் அசிரத்தை, எதிர்ப்புகளை எதிர்கொண்டு ஏக்நாத் ரானடே ஆற்றிய தொண்டு பாராட்டிற்குரியது. நிறுவனங்களை உருவாக்கும் திறனும் கொண்ட அவர் உருவாக்கிய விவேகானந்தா கேந்திரா, தேசியப் புனர் நிர்மாணப் பணிகள், கல்வி நிலையங்களை நடத்தி வருகிறது. தற்போது 640 கிளைகளுடன் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது. கன்யாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைய காரணமானவர் ஏக்நாத் ராணடே.

-ஆர்.கே

ஏக் நாத் ராணடேவின் பிறந்த தினம் இன்று ஜான்ஸி ராணி லக்ஷ்மிபாயின் பிறந்த தினம் இன்று