ஊருக்குள் உலவும் விஷ கிருமிகள்

பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினையை உலகமயமாக்க தலைகீழாக நின்று பார்க்கிறது! இந்தியாவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாம் ஐ.நா விடம் புகார் கொடுத்தது!
பாகிஸ்தான் அரசு சமர்ப்பித்த 115 பக்க கோப்பு தொகுப்புகளில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி சயீத், நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், சோனியா காந்தியின் தலைமையிலான தேசிய ஆலோசனை குழுவின் உறுப்பினரான ஜீன்ட்ரெஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்- லெலினிஸ்ட்) அமைப்பைச் சார்ந்த கவிதா கிருஷ்ணன், எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்டவர்களின் அறிக்கையை இணைத்திருந்தது பாகிஸ்தான்! பாகிஸ்தானின் அடிவருடிகளின் பட்டியல் இது! வேறென்ன?
அத்துடன் இந்தியாவிலுள்ள சில பிரபலங்களின் அறிக்கைகளும், டுவிட்டர்களில் பதிய விட்ட செய்திகளையும் ஆதாரமாகக் கொண்டு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது பாகிஸ்தான் .
இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பரப்பும், நியூயார்க் டைம்ஸ், ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் போன்ற ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை தொகுப்பாக அளித்துள்ளது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரைகள் புனையப்பட்டவை என்பதை பல ஊடகங்கள் தெளிவுப்படுத்திய பின்னரும் கூட, ஆவணங்களாக சமர்பித்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சமர்ப்பித்த கோப்பின் முதல் பக்கத்தில் ராகுல் காந்தி, தனது டுவிட்டரில், ”ஜம்மு காஷ்மீர் மக்களின் சுதந்திரமும் சிவில் உரிமைகளும் பறிக்கப்பட்டு 20 நாட்கள் ஆகின்றன” என்று பேசினார்!
எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிகை தலைவர்கள் ஆட்சியாளர்களி்ன் கடுமையான சட்டத்தையும் , மக்களை கொடுமை படுத்திய நிகழ்வுகளையும் கண்டனம் செய்துள்ளார்கள்.
மெஹபூபா முப்தி, ஆகஸ்டு 5ம் தேதி ஜனநாயகத்தின் கருப்பு தினம் என குறிப்
பிட்டுள்ளதையும் பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது!
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள முக்கியமான நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்டவை பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியதும் பாகிஸ்
தான் ஆடிப்போய்விட்டது. பாகிஸ்தானின் இந்த உளறலின் உச்சம் தான் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் கதவை அது தட்டியது.
இந்தியாவில் உள்ள புல்லுருவிகள், பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை கண்டிக்கா
தவர்கள். தொடர்ந்து இந்தியாவின் இறை
யாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்
பட்ட காஷ்மீர் பகுதியில் பயங்கர
வாத பயிற்சி முகாம்கள் நடத்தும் பாகிஸ்தானை கண்டித்து ஒரு சொல் பேசாதவர்கள் இவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *