உ.பி.,யில் மீண்டும் பா.ஜ.க

உத்தர பிரதேச மாநிலத்தில் வரும் 2022ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு எப்படியாவது ஆட்சியை பிடிக்க காங்கிரசின் பிரியங்கா, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் தீவிரமாக முயன்று வருகின்றனர். அங்கு நிகழும் ஒரு சிறு பிரச்சனையை கூட பூதாகரமாக்கி குளிர் காய முயல்கின்றனர். இந்நிலையில் ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி வோட்டர் அமைப்பு இணைந்து அங்கு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில், மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பா.ஜ.க 217 தொகுதிகளையும், சமாஜ்வாதி 150 முதல் 160 தொகுதிகளையும், காங்கிரஸ் 10 தொகுதிகளையும் வெல்லும் என கூறப்பட்டு உள்ளது. உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவாவிலும் பா.ஜ.க மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.