கேரளாவில் ஏழை மலைவாழ் மக்களில் ஒருவரக வாழ்ந்து வரும் ஒரு பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவர், சென்னைக்கு வந்து ஐ.ஐ.டியில் கல்வி பயின்று தற்போது ஐ.ஐ.எம் எனும் மாபெரும் கல்வி பீடத்துக்கு துணை பேராசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பெயர் ரஞ்சித். சரியான கூரைகூட இல்லாத வீட்டை தவிர வேறு எந்த சொத்தும் இல்லை அவர் குடும்பத்துக்கு. ஆனால், அதே சென்னையில் இருக்கும் பா.ரஞ்சித் என்பவரும் அவரது சீடர் மாரி செல்வராஜ் என்பவரும் ‘அடிடா, வெட்டுடா, குத்துடா’ என இளைய தலைமுறையை தவறாக வழி நடத்த முனைகின்றனர். ஒருவர் அம்பேத்கர் வழி என பொய்யாக சொல்லி அரிவாள் கத்தியோடு வன்முறைக்கு அடித்தளம் இடும்போது, மற்றொருவரோ பொருளாதார மேதையாக உயர்ந்து பல்லாயிரம் பேருக்கு வாழும் வழிகட்டியாக திகழ்கிறார். இவர்களில் யார் உண்மையான அம்பேத்கர் வழியில் நமக்கு வழிகாட்டுபவர்கள்?