இன்று வெளியாகும் தி.மு.க ஃபைல்ஸ்

திமுகவின் இந்த ஆட்சிக்காலம் மட்டுமல்லாமல், கடந்த ஆட்சிக் காலத்தின் ஊழல் பட்டியலும் சேர்த்து ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்படும் அந்த பட்டியல் எந்தளவு அதிர்ச்சியாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியத்தான் போகிறது. 2ஜி ஊழல் விசாரணையைக் கூட துரிதப்படுத்தி உள்ளோம் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த சூழலில், இது குறித்து நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தி.மு.க பைல்ஸ். நாளை காலை 10.15 மணி” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு சிறிய ப்ரோமோ வீடியோவையும் இணைத்துள்ளார்.