ந்தோனேஷிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தோடு விடைபெற்றார்.
ஜகார்த்தாவில் இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டிநடந்துவந்தது. மகளிர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனையும் தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள பி.வி.சிந்துவை 4-ஆம் நிலை வீராங்கனையையும், ஜப்பானைச் சேர்ந்தவருமானஅகேன் எமகுச்சி எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை எமகுச்சியிடம் 15-21, 16-21 என்ற நேர் செட்களில் போராடி வீழ்ந்து வெள்ளி வென்றார் பி.வி.சிந்து.