இதுதான் எதார்த்தம்

இந்த முதிய ஆப்பிரிக்கா சிங்கத்தின் புகைப்படத்தைப் பாருங்கள். இன்னும் சிறிது நேரத்தில் இது இறந்துவிடப் போகிறது.

ஒரு காலத்தில் இதனுடைய ஒரு சிறிய உறுமல் மொத்த காட்டையே குலைநடுங்கச் செய்தது. இதைக் கண்டாலே அனைத்து விலங்குகளும் தலைத் தெறிக்க ஓடும். புலி, சிறுத்தைகள்கூட இதனை கண்டால் பதுங்கும். ஆனால் இப்போது இது வயது முதிர்ச்சி பெற்ற சிங்கம். இதனால் முன்புபோல துரத்தி சென்று வேட்டையாட முடியாது. கிடைக்கும் மாமிசத்தை உண்ணக்கூட வாயில் பற்கள் கிடையாது.

நகரவே இப்பொழுது சிரமப்படுகிறது. இதுதான் நிகழும் என நன்றாகத் தெரிந்து இந்த சிங்கம் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியே வந்துவிட்டது.  காட்டு நாய்களின் கூட்டம் இதனை பார்த்தால் அவ்வளவுதான். இந்த சிங்கத்தின் இறப்பு அவ்வளவு சாதாரணமாக இருக்காது. அந்த சிங்கத்தை அவை கொஞ்ச கொஞ்சமாக கடித்துக் கொல்லும். நரக வேதனை அது.

இதுதான் தனது முடிவு என்று இந்த சிங்கத்துக்கு நன்றாகத் தெரியும். ஒரு துறவி போன்று அமைதியாக தனது மரணத்தை நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் எல்லாம் முடிந்து விடும். எனினும் தன்னுள் இருக்கும் கொஞ்ச சக்தியை கொண்டு நிற்க முயற்சிக்கிறது இந்த சிங்கம். சாவிலும் சிங்கம் சிங்கமே.

நீ உன்னுடைய பொருளின் மீது பெருமைகொள்கிறாயா? நீ உன்னுடைய சரீர அழகின் மீது கர்வம் கொண்டவளாக இருக்கிறாயா?  நீ உன்னுடைய புகழ்ச்சியின் மீது இச்சை கொண்டவனாக இருக்கிறாயா? உன் சொந்தபந்தங்கள், நட்பின்மீது மிகுந்த அபிமானம் வைத்திருக்கிறாயா?  நீயும் ஒரு நாள் இந்த சிங்கத்தை நிலைக்கு வருவாய். நாம் எல்லோரும் வருவோம்.

அப்பொழுது நம்முடைய இந்த பொருள், அழகு, புகழ்ச்சி, பெருமை, சொந்தபந்தங்கள், நட்பு எனும் மாயைகள் அனைத்தும் ஒரு தேவையில்லாத ஒரு மலிவான பொருளாக மாறிவிடும். இதுவே வாழ்க்கையின் கொடிய எதார்த்தம். ஒரு நாள் ஒரு சில நிமிடங்கள் உன்னுடைய மொத்த வாழ்வும் உன் கண் முன் பிரதிபலிக்கும். அப்பொழுது அந்த பிரதிபலிப்பை பார்த்து ரசிக்கும் அளவிற்கு நீ வாழ்ந்திருக்க வேண்டும்.