ஆர்.எஸ்.எஸ் அறிவிப்பு நமது இலக்கு நூறு சதவீத வாக்குப்பதிவு

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தேர்தல். நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் இது அவசியம். 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்வயம்சேவகர்கள் பணி
யாற்றுவார்கள். விரோதப் போக்கு, பிரிவினைவாதம், சமுதாயத்தில் பிளவு இவற்றை ஏற்படுத்தும் எந்த ஒரு முயற்சிக்கு எதிராகவும் சமுதாயம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபளே.
அண்மையில் நாகபுரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பிரதிநிதி சபா (தேசிய பொதுக்குழு) கூட்டத்தில் பொதுச் செயலராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட அவர் பிரதிநிதி சபா நிறைவில் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
“சமுதாய நல்லிணக்கம் சங்கப் பணிக்கு அடிப்படை”: ஆர்.எஸ்.எஸ்
ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர், “சமுதாய நல்லிணக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒரு திட்டம் அல்ல, அது தான் சங்கப் பணியின் அடிப்படை” என்று வலியுறுத்தினார்.
“நல்லவர்களின் சக்தி ஒன்றிணைந்து செயலாற்றும் போது தான் சமுதாய மாற்றம் ஏற்படும். ஆர்.எஸ்.எஸ். ஒட்டுமொத்த சமுதாயத்துடன் சேர்ந்து சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறது” என்று மேலும் கூறிய அவர், ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையின் போது ஒட்டுமொத்த சமுதாயமும் ஒன்று திரண்டு பணியாற்றியதை சுட்டிகாட்டினார்.
ஓங்கி வரும் சங்க சக்தி
“ஆர்.எஸ்.எஸ் பணி என்பது நாடு தழுவிய தேசிய பேரியக்கம். நாம் அனைவரும் ஒரே தேசத்தை சேர்ந்த ஒரே மக்கள். 2025விஜயதசமிக்குள் பூர்ண நகர், பூரண மண்டல், பூர்ண கண்டா இலக்குகளை அடைய தினசரி ஷாகாக்களையும் வாராந்தர மிலன்களையும் அதிகரிக்க சங்கம் இலக்கு வைத்துள்ளது” என்று குறிப்பிட்டார் தத்தாத்ரேய.
சமூகங்களிடையே நல்லுறவுக்காக
“இன்று சமுதாயத்தில் ஆர்.எஸ்.எஸ் பணிகளின் தாக்கம் வளர்கிறது. சங்கத்தின் மீதான சமுதாயத்தின் நெருக்கமும் ஆர்வமும் அதிகரித்துள்ளன. நாட்டில் இன்றும் தீண்டாமையும் சமூக பாகுபாடும் ஆங்காங்கே நிலவுகிறது. நகர்ப்புறங்களில் இது மிக குறைவு தான். பொதுக்கிணறு-, கோயில்-, மயானம் இவற்றில் எந்தவிதமான பாகுபாடும் இருக்கக்கூடாது” என அவர் வலியுறுத்தினார்.
சங்கம் துன்பம் துடைத்து துணை நிற்கும்
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த தத்தாத்ரேய, சந்தேஷ்
காலியில் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதிகள் குடியரசு தலைவரை சந்தித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கேட்டுக்கொண்டதைக் குறிப்பிட்டு அனைத்து ஸ்வயம்சேவகர்களுடன் சங்கத்தின் ஊக்கம் பெற்ற அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்கும் என்று தெரிவித்தார்.
சிறுபான்மைப் பித்து கூடாது
மைனாரிட்டி என்ற சொல் அதிகம் பயன்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கு, அரசியலில் மைனாரிட்டியிஸம் (சிறுபான்மைப் பித்து) கூடாது என்கிறது ஆர்.எஸ்.எஸ் ஸ்ரீ குருஜி (இரண்டாவது ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் (முதல் அனைத்து அகில பாரத தலைவர்களும் முஸ்லிம்களுடனும் கிறிஸ்தவர்களுடனும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த பணியாற்றியுள்ளார்கள்.
மணிப்பூரில் சங்க சேவை
மணிப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் மிகவும் வேதனையானவை. இரு சமுதாயத்தினர் மெய்டி – குக்கி இடையே புரிதல் ஏற்படுத்த சங்கம் செயலாற்றி வருகிறது. இரு தரப்பு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, இயல்பு நிலை திரும்ப முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம், அதற்கு பலன் கிடைத்து வருகிறது என்று குறிப்பிட்டார் தத்தாத்ரேய
கட்டுரையாளர்:
நமது செய்தியாளர்.