அமைச்சர் மா.பா.கருத்து

திருவள்ளூரில் மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின், செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘தேர்தல் பிரசாரத்திற்கு அதிமுகவினர் செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளிக்கின்றனர். உதயநிதியின் ஆபாச பேச்சுக்களை பார்த்து மக்கள் கோபத்துடன் உள்ளனர். இதன் காரணமாக திமுகவினர் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். திமுக கட்சியினர் செல்லும் இடமெல்லாம் மக்கள் துரத்துகின்றனர். ஆனால், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்று ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்’ என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து கூறியுள்ளார்.