அனைவராலும் நேசிக்கப்பட்டவர் கே.என் லட்சுமணன்

மறைந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் மயிலாப்பூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் வித்யா மந்திரி பள்ளியின் தாளாளருமான கே.என்.லட்சுமணன் காலமானார். பல் துறை வித்தகரான லட்சுமணன்ஜி அனைவரையும் அரவணைத்து கட்சிப்பணி புரிவதில் வல்லவர். எல்லோராலும் எப்பொழுதும் நேசிக்கப்பட்டவர். இயக்க வரலாறாக வாழ்ந்து காட்டியவர். எளிமையான அனைவராலும் அன்புடன் கே.என்.எல். என்று அழைக்கப்பட்ட அவரது நினைவுகள் விஜயபாரதம் வாசகர்களுக்காக…
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு. கே.என். லட்சுமணன் தனது 90வது வயதில் இறைவனடி சேர்ந்தார். பல்வேறு முகங்களை கொண்ட அன்பு மிக்க தலைவர். இவர் இருமுறை பாஜக மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

1930 அக்டோபர் மாதம் 20ந் தேதி சேலத்தில் வெள்ளி கொழுசு தயாரிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். தனது பள்ளி படிப்பை, சேலம் கோகுல இந்து மாகாஜன பள்ளியில் முடித்து, இளங்கலை படிப்பபை சேலம் நகாராட்சி கல்லூரியில் முடித்தார். இந்த கல்லூரிக்கு மூதறிஞர் ராஜாஜி படித்த கல்லூரி என்பதும் சிறப்பாகும் சேலத்தைச் சார்ந்த என்.பி.வாசுதேவன்ஜி மூலம் 1944-ல் ஆர்.எஸ்.எஸில் தன்னை இணைத்துக் கொண்டார். அச்சமயத்தில் மாவட்ட பிரச்சாரக் ஸ்ரீராம் ஜி டிடேல்கர் வழிகாட்டுதலின் பேரில், 146-ல் பெல்காமில் முதல் வருட பயிற்சி முகாமையும், 1947-ல் சென்னையில் இரண்டாம் வருட பயிற்சி முகாமையும் முடித்தார். மூன்றாம் வருட பயிற்சி முகாம் 1948-ல் காந்தி கொலையின் காரணமாக சங்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டதால் முடிக்க இயலவில்லை.

1957-ல் சேலம் வாசவி மஹாலில் நடைபெற்ற சங்க விழாவிற்கு வந்தவர் மானினிய ஸ்ரீ தந்தோ பந்த் தேங்கடிஜி அரசியலில் பங்கு கொள்ள விரும்பம் உள்ளவர்கள் கை உயர்த்துங்கள் என கோரினார். என்.பி.வாசுதேவன், எஸ்.ஏ. பழனிசாமி, கிருஷ்ணன், வையாபுரி, கே.எம். ராமசந்திரன், ஆர்.வி. ஆறுமுகம், கே.என். லட்சுமணன் ஆகியோர் கையை உயர்த்தினார்கள். இவர்கள் மூலம் சேலத்தில் பாரதிய ஜனசங்கம் துவக்கப்பட்டது. பாரதிய ஜனசங்கத்தில் வாசுதேவன்ஜி மாநில தலைவராக பணியாற்றிய போது, கே.என். லஷ்மணன் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றினார். உள்ளாட்சி தேர்தலின் போது, தமிழகத்தில் பாரதிய ஜனசங்கம் புதிய வரலாறு படைத்தது. சேலம், மதுரையில் காங்கிரஸ் கட்சியை தோல்வியடைய செய்தது. இதில் கே.என். லட்சுமணனின் பங்கு மகத்தானது. சேலம் நகரசபையை காங்கிரஸ் கட்சி கைப்பற்ற விடாமல் தடுத்தது பாரதிய ஜனசங்கத்தின் ஒரே உறுப்பினர் ராமராவ்.

பாரதிய ஜனசங்கத்தில் பணியாற்றிய போது, மாநில பாரதிய ஜனசங்க மாநாடு சேலத்தில் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் வாஜ்பாயி, காயத்திரி தேவி, பண்டிட் தீனதயாள் உபாத்யா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களின் இந்தி உரையை தமிழில் மொழி பெயர்த்தவர் கே.என்.எல்.ஜி. 1969 ஜூன் மாதம் 16ந் தேதி கேரளத்தில் மலப்புரம் மாவட்டம் உருவாவதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டவர்களில் கே.என்.லஷ்மணனும் ஒருவர். சேலத்தில் தம்பம்பட்டியில் பங்குனி உத்திர திருவிழாவின் பொது, தேர் ஊர்வலத்தை குறிப்பிட்ட பகுதி வழியாக கொண்டு செல்ல கூடாது என இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, அதை எதிர்த்து போராடிய ஆடிட்டர் ரமேஷ்ஜிக்கு பக்கபலமாக இருந்தவர் லஷ்மணன் ஜி.

கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், இந்தி மொழி கற்பிப்பது, பள்ளியிலிருந்து நீக்கிய பின்னர், என்.பி. வாசுதேவன் உள்ளிட்ட சில சுயசேவகர்கள் ஆலோசித்து உருவாக்கிய ஸ்வயம் பள்ளி வித்யா மந்திரி இதன் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டவர் லஷ்மணன் ஜி. 1971-ல் தி.மு.க. ஆட்சியில், தி.க.வினர் கடவுள் படங்களுக்கு அவமதிப்பு ஊர்வலம் நடத்திய போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வல பாதையில், முன்நின்று ஆர்பாட்டம் நடத்தியவர் லஷ்மணன்ஜி. 1980-ல் பாரதிய ஜனதா கட்சியாக மாறிய பின்னர், பல பொறுப்புகளில் பணியாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *