தேனி மாவட்டம், வேதபுரியில் அமைந்துள்ள ஸ்ரீஸ்வாமீ சித்பவாநந்த ஆசிரமத்தில், பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹா ஸ்வாமிகளின் சமாதித் தலத்தில், அதிஷ்டாந தியான மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன் மகா கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் 25ம் தேதி காலை 10:15 மணியளவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆராதனைகள், பூஜைகள் 23 ஏப்ரல் முதல் 29 ஏப்ரல் வரை நடைபெறும். சமஸ்கிருதத்தில் அதிஷ்டாநம் என்றால் அமர்விடம், அடிப்படை, ஆதாரம் என பல பொருளுண்டு. துறவிகளின் சமாதிகளை மக்கள் அவ்வாறு அழைப்பதுண்டு. காரணம், சரீரத்தைவிட்டு சித்தியான அவர்களது உடலை புதைக்கும் இடத்தில் இருந்து அவர்களின் அனுக்கிரகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.