ஆர்.எஸ்.எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா (ஏ.பி.பி.எஸ்) கூட்டம் மார்ச் 12 முதல் மார்ச் 14 வரை சமல்காவின் பட்டிகல்யாணில் உள்ள சேவா சாதனா கேந்திராவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளவுள்ள 1,400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை கூட்டாக வடிவமைக்கின்றனர்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மிக முக்கியமான அமைப்பாக அகில பாரதிய பிரதிநிதி சபா (ஏ.பி.பி.எஸ்) திகழ்கிறது என அகில பாரதிய பிரச்சார பிரமுகரான சுனில் அம்பேகர், ஸ்ரீ அம்பேகர் சேவா சாதன ஏவம் கிராம் விகாஸ் கேந்திராவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஹரியானா பிராந்த் சங்க்சாலக் பவன் ஜிண்டால், அகில் பாரதிய சக பிரசார் பிரமுக் நரேந்திர தாக்கூர் மற்றும் அலோக் குமார், க்ஷேத்ர பிரசார பிரமுக் அனில் குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.
ஆண்டுதோறும் கூடும் அகில பாரதிய பிரதிநிதி சபாவில் சங்கத்தின் முந்தைய ஆண்டு செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்கிறது. மேலும் அடுத்த ஆண்டுக்கான உத்திகள் மற்றும் செயல்திட்டங்களை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆண்டு, ஏ.பி.பி.எஸ் மார்ச் 12 முதல் மார்ச் 14 வரை பானிபட் மாவட்டத்தில் உள்ள சமல்கா அடிப்படையிலான சேவா சாதனா ஏவம் கிராம விகாஸ் கேந்திராவில் பட்டிகல்யாணில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் 1,400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த ஆண்டு ஏ.பி.பிஎ.ஸ் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் 34 அமைப்புகளைச் சேர்ந்த காரியகர்த்தாக்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
ஏ.பி.பி.எஸ் கூட்டத்திற்கு முன்னதாக மார்ச் 11ம் தேதி அகில பாரதிய காரியகாரி மண்டல் (ஏ.பி.கே.எம்) கூட்டம் நடைபெற உள்ளது. காரியகாரி மண்டல் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் விவாதிக்கப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கும் கூட்டமாகும். ஏ.பி.பி.எஸ் கூட்டத்தின் கடைசி நாளான மார்ச் 14 அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே, செய்தியாளர் சந்திப்பை நடத்தி தீர்மானங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்வார். மார்ச் 12ம் தேதி தொடங்கப்படும் ஏ.பி.பி.எஸ் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், அகில பாரத பொதுச் செயலாளர், அனைத்து துணைச் செயலாளர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள், பல்வேறு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்த அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த நிகழ்வை சிறப்பிப்பார்கள்.
2025ம் ஆண்டில் ஆர்.எஸ்எ.ஸ் உருவாகி 100 ஆண்டுகள் நிறைவடையும். கடந்த ஆண்டில் மதிப்பாய்வு மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விரிவாக்கப் பணிகளுக்கான உத்திகளை அகில பாரதிய பிரதிநிதி சபா வகுக்கும். இக்கூட்டத்தில் நிகழாண்டுக்கான சங்கத்தின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்வது மட்டுமல்லாமல், 2025க்குள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான உத்திகளையும் வகுக்கும்.
ஷாகா என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முதுகெலும்பாகவும், சமூக மாற்றத்திற்கான மையமாகவும் உள்ளது. ஷாகாக்களின் ஸ்வயம்சேவகர்கள் அடிப்படை உண்மைகள் மற்றும் சமூக நிலைமைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில் பிரச்சினைகளைத் தேர்ந்தெடுத்து, சமூக மாற்றத்திற்காக பாடுபடுகிறார்கள். ஸ்வயம்சேவகர்கள், ஷாகாக்கள் மூலம், சமூகத்தை தன்னிறைவுபடுத்தும் திட்டங்களில் வேலை செய்கிறார்கள். சேவை நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் சமூக நல்லிணக்க சூழலை உருவாக்குவதற்கும் பணியாற்றுகிறார்கள். ஸ்வயம்சேவகர்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக வேலை செய்கிறார்கள், மேலும் அமிர்த காலத்தின் போது செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களையும் தீர்மானிக்கிறார்கள். 2024ம் ஆண்டு மகரிஷி தயானந்த சரஸ்வதி பிறந்த 200 ஆண்டுகளையும், பகவான் மகாவீரின் 2,550வது நிர்வாண ஆண்டையும் நிறைவு செய்யும். இந்த நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில் சிறப்பு அறிக்கைகள் வெளியிடப்படும்” என தெரிவித்தார்.